பொது செய்தி

தமிழ்நாடு

தனியாரிடம் நிலக்கரி கொள்முதல் தீவிர விசாரணை நடத்த தனிக்குழு

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:தனியார் நிறுவனங்களிடம் இருந்து 10 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பாக, தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை நடந்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள
 தனியார், நிலக்கரி கொள்முதல், விசாரணை , தனிக்குழு

சென்னை:தனியார் நிறுவனங்களிடம் இருந்து 10 ஆண்டுகளாக கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பாக, தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை நடந்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. அதில், 60 ஆயிரம் டன், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள மத்திய அரசின், 'கோல் இந்தியா' சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. மீதி 'டெண்டர்' வாயிலாக, தனியார் நிறுவனங்களிடம் வாங்கப்படுகிறது.

நிலக்கரி கொள்முதல் மற்றும் பயன்பாட்டில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுகின்றன. வட சென்னை அனல் மின் நிலையத்தில், பதிவேடு மற்றும் இருப்பு கணக்கை சரிபார்த்த போது 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகி இருப்பதாக, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,தெரிவித்தார். நிலக்கரி இருப்பு தொடர்பாக, முழு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்நிலையில், தனியாரிடம் வாங்கப்பட்ட நிலக்கரி தொடர்பாக, தனிக்குழு அமைத்து விசாரிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு ஒதுக்கிய நிலக்கரி முழு அளவில் கிடைப்பதில்லை. இதனால், உலகளாவிய 'டெண்டர்' கோரி, தனியாரிடம் இருந்து ஆண்டுக்கு 20 லட்சம் என்றளவில் நிலக்கரி வாங்கப் பட்டது. அதன் மதிப்பு 1,200 கோடி ரூபாய்க்கு மேலாகும்.

கடந்த 2015க்கு முந்தைய ஆண்டுகளில் ௧ டன் நிலக்கரி 90 டாலருக்கு அதிகமாக வாங்கப் பட்டது. அப்போது, உலக சந்தையில் ௧ டன் விலை, 60 டாலருக்கு கீழ் இருந்தது. இது தொடர்பாக, அப்போதே புகார்கள் எழுந்தன.மின் வாரிய தலைவராக சாய்குமார் பொறுப்பேற்ற பின், 2015-, 2016ல், டன் நிலக்கரி, 65 டாலர் என்ற சந்தை விலை அளவிற்கு வாங்கப்பட்டது. அவர், ஏல முறையை அறிமுகப்படுத்தியதுடன், ஒரு கட்டத்தில், தனியாரிடம் நிலக்கரி வாங்குவதையே நிறுத்தினார்.

அவர், மின் வாரிய தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டதும், 2018ல் மீண்டும் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது. இரு ஆண்டுகளுக்கு முந்தைய மத்திய தணிக்கை அறிக்கையில், 2012 ஜூலை முதல் 2016 வரை, நிலக்கரி கொள்முதலில் சரியான முறையை கடைப்பிடிக்காத தால் 750 கோடி ரூபாய்க்கு தேவையற்ற செலவு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.தற்போது, நிலக்கரி மாயமாகி இருப்பது தொடர்பாக, விசாரணை நடக்கிறது.

அதனுடன், தனிக்குழு அமைத்து 10 ஆண்டுகளாக தனியாரிடம் வாங்கப்பட்ட நிலக்கரி கொள்முதல், செலவிடப்பட்ட தொகை உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
22-ஆக-202111:25:47 IST Report Abuse
duruvasar அரசு நிறைய குழுக்கள் தினம் அமைத்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற நீதியரசர்கள் பற்றாகுறை இருக்கிறது. மற்ற மாநிலங்களில் வசிக்கும் நீதியரசர்களுக்கும் வாய்ப்பு கிடைக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X