பொது செய்தி

தமிழ்நாடு

பூணுாலின் புனிதம் காப்போம் - இன்று ஆவணி அவிட்டம்

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஆவணி அவிட்டத்தன்று அணியப்படும் பூணுாலின் மகிமையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவனுக்கு வாழ்க்கை முறையை உபதேசிப்பது தான் உபநயனத்தின் நோக்கம். உபநயனம் என்பது ஞானமாகிய மூன்றாவது கண்ணைத் திறப்பதாகும். அப்போது அணிவிக்கப்படும் பூணுால் மிக புனிதமானது. வாமன மூர்த்திக்கு விசேஷமாக உபநயனம் நடத்தப்பட்டது. சூரியபகவானே வந்து குழந்தை வாமனனுக்கு காயத்ரி மந்திர உபதேசம் செய்தார்.

பூணுாலின் புனிதம் காப்போம் - இன்று ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டத்தன்று அணியப்படும் பூணுாலின் மகிமையைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவனுக்கு வாழ்க்கை முறையை உபதேசிப்பது தான் உபநயனத்தின் நோக்கம். உபநயனம் என்பது ஞானமாகிய மூன்றாவது கண்ணைத் திறப்பதாகும்.

அப்போது அணிவிக்கப்படும் பூணுால் மிக புனிதமானது. வாமன மூர்த்திக்கு விசேஷமாக உபநயனம் நடத்தப்பட்டது. சூரியபகவானே வந்து குழந்தை வாமனனுக்கு காயத்ரி மந்திர உபதேசம் செய்தார். வாமன மூர்த்தி ஏன் பூணுால் அணிய வேண்டும்? பூலோகத்தில் உள்ள நாமும் சமஸ்காரங்களை முறையாக செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவே. வாமனரை வழிபட்டால் குழந்தைகளுக்கு சீக்கிரமாக உபநயனம் நடத்தும் பாக்கியம் கிடைக்கும்.

பூணுால் திரிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார் அந்தணர் ஒருவர். ஒருநாள் அவரது மனைவி,“ நீங்கள் எப்போதும் பூணுால் திரித்தால் எப்படி குடும்பம் நடக்கும்? மன்னரிடம் சென்று ஏதாவது உதவி கேளுங்கள்,” என வற்புறுத்தினாள். மன்னரிடம் சென்று “நான் ஒரு பூணுால் கொண்டு வந்திருக்கிறேன். அதற்கு எடைக்கு எடை மட்டும் தங்கம் கொடுங்கள்” என தானம் கேட்டார். தராசு தட்டில் பூணுால் ஒருபுறமும், தங்க காசு மறுபுறமும் வைக்கப்பட்டது.

எத்தனை காசுகள் வைத்தும் ஈடாகவில்லை. பூணுால் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. இதைக் கண்ட அமைச்சர், ''நாளை வாருங்கள். தருகிறோம்'' என்று அனுப்பினார்.
அந்தணருக்கு ஒரே பயம். பூணுாலை வைத்து மாயமந்திரம் செய்ததாக மன்னர் நினைப்பாரோ என கலங்கினார். இந்த பயத்தில் துாக்கம் வரவில்லை. மறுநாள் வழக்கமான நியமங்களைச் செய்யாமல் பயத்துடன் அரண்மனைக்கு வந்தார். தராசில் பூணுால் வைக்கப்பட்டது. ஒரு காசை வைத்தவுடன் தட்டு தாழ்ந்தது. அதை பெற்றுக் கொண்டு புறப்பட்டார். இதையறிந்த மன்னர் ஆச்சரியத்துடன், “நேற்று நிறைய தங்கக்காசுகள் வைத்தும் தாழாத தராசு, இன்று ஒரே காசுக்கு தாழ்ந்தது எப்படி” எனக் கேட்டார்.

''மன்னா... பூணுால் புனிதமானது. அந்தணர் நேற்று அன்றாட நியமங்களைச் செய்து விட்டு வந்தார். அதனால் பூணுாலுக்குரிய மதிப்பு அபரிமிதமாக இருந்தது. இன்று பயத்தில் நியமங்களைச் செய்ய மறந்தார். இதனால் ஒரு காசுக்குத் தான் அதன் மதிப்பு தேறியது” என்றார்.பூணுால் அணிவதை சடங்காக கருதாமல் அதன் நியமங்களைப் பின்பற்றுவதில் தான் புனிதம் காக்கப்படும் என்பதை உணர்வோம்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
22-ஆக-202115:31:08 IST Report Abuse
r.sundaram பிராமணர்களுக்கு மட்டுமே பூணல் என்பது கிடையாது. எனக்கு தெரிந்து எனது சிறுவயதில் எண்கள் வீட்டில் வேலை செய்ய வந்த மர ஆசாரி பூணல் போடுவார். எண்கள் வீட்டுக்கு வரும் தங்க நகை செய்யும் ஆசாரி பூணல் போட்டுக்கொண்டிருந்தார். இன்றும் எண்கள் ஊரில் பிராமணர் அல்லாத குருக்கள், கோவிலில் பூ கட்டுபவர் போனால் போட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் பிராமணர்கள் மட்டுமே வழி வழியாக தாத்தா, அப்பா, பேரன் என்று பூணல் போடுவதை இன்று வரை கடைபிடிக்கிறார்கள். மற்றவர்கள் இதை கடைபிடிப்பதில்லை. ஆனால் ஹிந்துவாக பிறந்தால் அவருக்கு பூணல் கட்டாயம் உண்டு . ஒருசிலர் தாய் தந்தையருக்கு கடைசி காலம் காரியம் செய்யும் பொது பூணல் போட்டுக்கொள்கிறார்கள். பிராமணர்களுக்கு மட்டுமே பூணல் என்பது இல்லை.
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
22-ஆக-202121:08:05 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்"பிராமணர்களுக்கு மட்டுமே பூணல் என்பது இல்லை. " அப்படியா ? நேத்து சரக்கு ரொம்ப ஸ்டிராங்கோ ?...
Rate this:
Cancel
P Karthikeyan - Chennai,இந்தியா
22-ஆக-202111:52:12 IST Report Abuse
P Karthikeyan ஹிந்துக்கள் அழியலாம் ..ப்ராஹ்மணர்களுக்கு அழிவே கிடையாது... வாழ்க அந்தணர் ..
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஆக-202108:46:11 IST Report Abuse
Sampath Kumar அப்படி என்றால் உலகில் உள்ள அனைவரும் பூணுல் போட வேண்டியது தானே? ஏன் போடா வில்லை? பூணுல் ஒரு சில பிரிவினர் மட்டும் அணிவது மனித நேயத்துக்கு எதிரானது அல்லவா? அதன் மகிமையை குறைப்பது தர்மமும் ஆகாது ஏனவே அனைவரும் பூணுல் அணிய வேண்டும்
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
22-ஆக-202120:45:20 IST Report Abuse
தமிழ்வேள்அனைவரும் அணியலாம் ..தவறேதுமில்லை ..ஆனால் அனுஷ்டானங்கள் குறையக்கூடாது ...முக்கியமாக நாஸ்திகம் , பாஷாண்ட மதங்கள் மீதான நம்பிக்கை அறவே கூடாது.....டாஸ்மாக் திருட்டு திராவிடம் பக்கம் போகவே கூடாது ....ஆனால் அது திராவிடர்களால் முடியுமா ?...
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
22-ஆக-202121:06:58 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்உலகில் உள்ள அனைவரையும் பூணூல் அணியும்படி நீங்கள் வற்புறுத்தலாம் நீங்களும் அணியலாம்...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
22-ஆக-202121:54:01 IST Report Abuse
meenakshisundaramஒரு சிலர் மட்டுமே பூணூல் அணிவது மனித நேரத்துக்கு எதிரானது என்ற கருத்து எவ்வளவு வெறுப்பைக்காட்டுகிறது>சுத்த அறிவிலித்தனம் அல்லவா இது?அவரவர் வழக்கம் அனுஷ்டானங்கள் தெரியாத ஜென்மங்கள் ஜடங்களுக்கி சமமே .சீக்கியர்கள் சிகை வளர்ப்பது இவனுங்களுக்கு தெரியுமா ?கிறிஸ்துவன் 'ஞான ஸ்நானம் 'ஏன் பண்ணுகிறான்னு இவனுக்கு கேட்க தெரியுமா ? சுன்னத் என் செயது கொள்கிறார்கள் முஸ்லீம் என்று கேட்கலாமே ?இதில் மனித நேயம் என்பது மற்றவர் கொள்கைகளுக்கு மதிப்பளிப்பது வே தவிர உளறல் கூடாது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X