சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரமற்ற கட்டுமானத்தால் கீழ்பவானி கால்வாய் உடைப்பு

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஈரோடு :ஈரோடு அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தரமற்ற கான்கிரீட் தளம், ஸ்லாப் கரை உடைந்து உள்ளது. 'கான்கிரீட் தளம் தரமற்றமுறையில் அமைக்கப்பட்டதே காரணம்' என, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 2.50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முற்றிலும்
தரமற்ற கட்டுமானம், கால்வாய் ,உடைப்பு  :கீழ்பவானி பாசன ,விவசாயிகள் ,

ஈரோடு :ஈரோடு அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தரமற்ற கான்கிரீட் தளம், ஸ்லாப் கரை உடைந்து உள்ளது. 'கான்கிரீட் தளம் தரமற்றமுறையில் அமைக்கப்பட்டதே காரணம்' என, விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் நீரால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 2.50 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. முற்றிலும் மண்ணால், 200 கி.மீ., துாரத்துக்கு வாய்க்கால் அமைந்துள்ளது. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் இந்த வாய்க்கால் கரை மற்றும் தளத்தை கான்கிரீட்டால் அமைத்து நவீனப்படுத்த, 760 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் துவங்கின.


60 ஆயிரம் ஏக்கர்



நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம் என்பதால், கான்கிரீட்டால் கரை, தளம் அமைத்தால், மறைமுகமாக பாசனம் பெறும், 60 ஆயிரம் ஏக்கர் நிலம், நிலத்தடி நீர், கிணறு, ஏரி, குட்டைகள் பாதிக்கும் எனக்கூறி ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்க்கின்றனர். மற்றொரு தரப்பு விவசாயிகள் கான்கிரீட் கரையை அமைக்க வேண்டும் என ஆதரிக்கின்றனர். இதற்கிடையில், கடந்த, 15ல் பவானிசாகர் அணை பாசனத்துக்காக, 1,000 கனஅடி நீர் வெளியேற்றினர். கடந்த, 19ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஈரோடு அடுத்த நசியனுார் கண்ணவேலம்பாளையம் கிராமத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம், கரை அமைத்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
அதிகாலை, 4:00 மணிக்கு பொதுப்பணித்துறையினர் அவ்விடத்தை சீரமைத்தனர்.

ஆனால் காலை, 6:00 மணிக்கு அதே இடத்தில் இருந்து, 10 மீட்டருக்குள் மிகப்பெரிய அளவில் கான்கிரீட் தளம் உடைந்து, பூமிக்கு கீழாக புதிதாக அமைத்த கான்கிரீட் கரைக்கு அடியில் வெள்ளமாக நீர் வெளியேறியது. அருகே உள்ள கிராமங்களில் மூன்றாம் நாளாக நேற்றும் தண்ணீர் ஓடுகிறது. 100 ஏக்கருக்கு மேல் கரும்பு, தென்னை, மக்காசோளம் மற்றும் ஊடுபயிர்கள் நீரால் சூழ்ந்துள்ளன.தரமற்ற முறையில் கான்கிரீட் போடும் பணி நடப்பதால் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.



கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க செயலாளர் நல்லசாமி கூறியதாவது:இதுவரை மண் கரையாக இருந்தபோதுகூட, இதுபோன்ற பெரிய உடைப்பு ஏற்படவில்லை. தரமற்ற கான்கிரீட் தளம், கரையின் அடிப்பகுதியில் போதிய அழுத்தம் தராமல் ஸ்லாப் கரை அமைத்ததால் உடைந்துள்ளது. கான்கிரீட் பணி செய்த அனைத்து இடமும் ஆபத்தாக உள்ளது. இப்பணியை நிறுத்தி, கரையை மட்டும் அகலப்படுத்தி முன் போல தண்ணீர் திறக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

முள்ளம்பட்டி பஞ்., முன்னாள் தலைவர் குழந்தைசாமி கூறியதாவது:உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து, 50 மீட்டரில் அத்திக்கடவு - அவினாசி திட்ட குழாய் பதிப்புக்கு பணி நடக்கிறது. அங்கு பாறைகளை உடைக்க, வெடி வைத்து 10 நாட்களாக வெடிக்க செய்கின்றனர்.
வெடியின் அதிர்வால் இப்பகுதி வீடு, வாய்க்கால் கான்கிரீட் தளம், கான்கிரீட் கரை பலவீனமாகி, வாய்க்கால் தரை மண் வலுவிழந்து உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே, கலெக்டரிடம் மனு வழங்கி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'கரைகளில் கான்கிரீட் தளம், கரை அமைத்து சில நாட்களே ஆகிறது. இப்பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தண்ணீர் விடப்பட்டதால் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 'இந்த வாய்க்கால் பூமிக்குள் உள்ள வெற்றிடம், ஓட்டைகள் மூலம் நீர் கசியும். தற்போது பெரியதாக உடைப்பாகிவிட்டது. 10 நாட்களுக்குள் சீரமைப்பு பணியை முடித்து, மீண்டும் தண்ணீர் திறக்க வழி செய்து வருகிறோம்' என்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர்.


முதல்வரிடம் கோரிக்கை



கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து வரும் கட்டுமான பணிகள் தரமற்றவையாக இருப்பதால், இது போன்ற சம்பவம் நடப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை புளியந்தோப்பு, பெரம்பலுார் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சேதமடைந்த வரிசையில், கீழ்பவானி வாய்க்கால் கரை கட்டுமான பணிகளும் தரமற்றவையாகி உள்ளன. 'கட்டுமான பணிகளின் தரம் குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தர விட வேண்டும்' என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paramasivam - Chennai,இந்தியா
22-ஆக-202122:02:34 IST Report Abuse
Paramasivam இந்த ஆட்சியர்கள் கடந்த ஆட்சியில் நடந்த திட்டத்திற்கும் தற்போது கமிஷன் வேட்டை நடத்தி வருவதாக விகடன் பத்திரிகை செய்தி வெயிட்டு உள்ளது. அப்பொறம் எங்கே இருக்கப்போகிறது தரம்????
Rate this:
Cancel
22-ஆக-202120:12:00 IST Report Abuse
அப்புசாமி குடிமராமத்து செஞ்சு வெட்டிநடை போட்ட தமிழகம்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
22-ஆக-202120:08:17 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஆடீம்கா கொள்ளை, பாஜாக்கா பங்கு. விசாரணை செஞ்சு எடுங்க பணத்தை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X