பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோயிலில் புத்தர் சிற்பம் : வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வில் தகவல்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை-விருதுநகர் அருகே கள்ளிக்குடி சிவன் கோயிலில் நடத்திய கள ஆய்வில் புத்தர் சிற்பம் இருப்பதை கண்டறிந்ததாக பாண்டியநாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் ஸ்ரீதர், மதுரை அருண்சந்திரன், வீரசோழன் தாமோதரகண்ணன் அகத்தாபட்டி ஆதிபெருமாள் தெரிவித்தனர் .அவர்கள் கூறியதாவது:கோயில் கட்டும் போது கருவறை மற்றும் அர்த்தமண்டபம் தான் கட்டுவார்கள். அவ்வாறு

அருப்புக்கோட்டை-விருதுநகர் அருகே கள்ளிக்குடி சிவன் கோயிலில் நடத்திய கள ஆய்வில் புத்தர் சிற்பம் இருப்பதை கண்டறிந்ததாக பாண்டியநாட்டு பண்பாட்டு மைய வரலாற்று ஆய்வாளர்கள் ஸ்ரீதர், மதுரை அருண்சந்திரன், வீரசோழன் தாமோதரகண்ணன் அகத்தாபட்டி ஆதிபெருமாள் தெரிவித்தனர் .அவர்கள் கூறியதாவது:கோயில் கட்டும் போது கருவறை மற்றும் அர்த்தமண்டபம் தான் கட்டுவார்கள். அவ்வாறு கட்டும் போது இடை நாழியோடு கட்டும் வழக்கம் இருந்துள்ளது.இடைநாழி என்பது கருவரைக்கும், அர்த்தமண்டபத்திற்கும் நடுவில் சற்றே உள்வாங்கிய பகுதியாகும்.கோயில் அர்த்தமண்டபத்தின் வெளிப்புற சுவரில் தேவகோஷ்டத்திற்கு மேல் உள்ள மகரதோரனத்தில் அமர்ந்துள்ள நிலையில் அழகான புத்தர் சிற்பம் ஒன்று காணப்படுகிறது.இச்சிற்பம் பீடத்தின் மேல், உப பீடத்தில் அமர்ந்திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. 18 செ.மீ., உயரம் , 17 செ.மீ., அகலம் தலையில் சிறிய குடுமி போன்ற அமைப்பும் காணப்படுகிறது.இதற்கு உஷ்நிஷா ,எரியும் தீச்சுடர் என பொருள். தலைக்கு மேல் பிரபாவளி காணப்படுவதால், இப்பகுதி ஒரு காலத்தில் புத்த மதம் சிறப்பாக இருந்தததை காட்டுகிறது. இங்கு தீவிர ஆய்வு செய்தால் மேலும் பல தகவல் கிடைக்கும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X