பண்டைய காலத்தை பறைசாற்றும் அணிகலன்கள்; 3 தலைமுறையாக இன்றும் பாதுகாக்கும் சிவகாசி பெண்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பண்டைய காலத்தை பறைசாற்றும் அணிகலன்கள்; 3 தலைமுறையாக இன்றும் பாதுகாக்கும் சிவகாசி பெண்

Added : ஆக 21, 2021
Share
சிவகாசி:பண்டைய காலம் முதலே தனி மனிதர்கள் பொன், வெள்ளி முதலியவற்றால் ஆன ஆபரணங்களை அணிந்து தம்மை அலங்கரித்து கொண்டனர். அவற்றை அணிவதை பெருமைக்குரியதாகவும், மதிப்புக்குரியதாகவும் கருதி கொண்டனர். பொதுவாக தமிழ் இலக்கியங்கள் பெண்களை பற்றி பேசும் போது அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களோடு தொடர்பு படுத்தியே மாணிழை மகளிர், வாலிழை மகளிர் என அடைமொழிகளுடன்

சிவகாசி:பண்டைய காலம் முதலே தனி மனிதர்கள் பொன், வெள்ளி முதலியவற்றால் ஆன ஆபரணங்களை அணிந்து தம்மை அலங்கரித்து கொண்டனர். அவற்றை அணிவதை பெருமைக்குரியதாகவும், மதிப்புக்குரியதாகவும் கருதி கொண்டனர். பொதுவாக தமிழ் இலக்கியங்கள் பெண்களை பற்றி பேசும் போது அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களோடு தொடர்பு படுத்தியே மாணிழை மகளிர், வாலிழை மகளிர் என அடைமொழிகளுடன் குறிப்பிட்டுள்ளனர். மகளிரை பற்றிய அடை மொழிகள் , அவர்கள் அணிந்த அணிகலன்களின் சிறப்பை குறிப்பதாக இருக்கும். சமூக மாற்றம் நிகழ அனைவரும் காது, கழுத்தில் அணிகலன்கள் அணிய துவங்கினர். அழகி ஒருத்தி அணிகலன் பல அணிந்து மணலில் உலவிய செய்தியை புறநானுாறு கூறுகிறது. பொன்னாற் செய்த வளைந்த ஆபரணங்கள் அணிந்த மகளிர் உயர்ந்த மாடங்களில் வாழ்ந்ததையும் , அம்மகளிர் பல்வகை மணிகள் கோர்த்த வடங்கள்,கால்களில் பொன்னால் செய்த பூண்களுடன் பொற்சிலம்பு , கைகளில் பொன் வளையல்கள், காதில் பொன்னால் ஆன தோடு அணிந்து வலம் வந்துள்ளனர். பெண் என்றாலே அழகுதான். ஆனாலும் அழகுக்கு அழகு சேர்க்க காது, கழுத்து, கால்களில் அணிகலன்கள் அணிந்தனர். ஆதி காலத்தில் இருந்தே அணிகலன்கள் மீது பெண்களுக்கு ஆசை அதிகம். ஆதி காலத்தில் மண்ணினால் செய்யப்பட்ட அணிகலன்களையும், பின் சங்கு, சிப்பி, சோவி, செம்பு, வெள்ளி, தங்கம் என வித விதமாக அணிந்து பெண்கள் மகிழ்ந்தனர். பண்டைய காலத்தில் பெண்கள் கொப்பு, எதிர்தவடு, குறுக்கு தட்டு, லோலாக்கு, தோடு, தண்டட்டி, மொன்னப்ப தட்டு, பாம்படம் , சவுடி கங்கனம், வாகுவளையம் , தோள்வளையம், கழுத்து ஆரம், ஒட்டியாணம், மேகலை, கொலுசு, சூரிய சத்திர பறை என பல அணிகலன்கள் அணிந்துள்ளனர். இந்த அணிகலன்களை 3 தலைமுறையாக இன்றும் பாதுகாத்து வருகிறார் சிவகாசி அனந்தப்ப நாடார் தெருவில் வசிக்கும் மஞ்சுளா.அவர் கூறியதாவது: பண்டைய காலத்தில் பெண்கள் அணிகலன்களாக பயன்படுத்திய தோடு, வளையல் உள்ளிட்ட பொருட்களை எங்களுடைய மூதாதையர் பாதுகாத்து வந்தனர். அதை இன்று வரையிலும் நாங்கள் பாதுகாத்து வருகிறோம். இந்த அணிகலன்கள் தற்சமயம் உருமாறி வெள்ளி, தங்கம், வைரம், முத்து என்றாகி விட்டது. ஆனாலும் அன்றைய காலத்தில் பெண்கள் அணிந்தவற்றை பொக்கிஷமாக பாதுகாக்கிறோம். இத்தகைய ஆபரணங்களை இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்வதற்காக பத்திரமாக வைத்துள்ளோம். மேலும் பழங்கால மர சிற்பங்கள், சமையல் பொருட்கள் ,விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றையும் சேகரித்து வருகிறேன். பள்ளி, கல்லுாரிகளிலும் இவற்றினை காட்சி படுத்தி வருகிறேன்,என்றார். வாழ்த்த 98433 48888.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X