மோடிக்கும், கட்கரிக்கும் பிரச்னை?

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சமீபத்தில் பார்லி., நடவடிக்கைகள் முடக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் 'ஜவஹர்லால் நேரு சிறந்த தலைவர்' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்து, கட்கரிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சாலை போக்குவரத்து
 டில்லி உஷ்!

சமீபத்தில் பார்லி., நடவடிக்கைகள் முடக்கப்பட்ட போது, எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் 'ஜவஹர்லால் நேரு சிறந்த தலைவர்' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, பா.ஜ.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமரானதிலிருந்து, கட்கரிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. சாலை போக்குவரத்து துறையின் அமைச்சராக உள்ள கட்கரி, எந்த எம்.பி., வந்து தங்கள் தொகுதிக்கு சாலை போட வேண்டும் என கேட்டாலும் உடனே சம்மதம் தெரிவித்து விடுகிறார். இது தான் பிரச்னைக்கு காரணம் என்கின்றனர்.

'பல முக்கிய போக்குவரத்து திட்டங்கள் இன்னும் முழுமையாக நிறைவேறாத நிலையில், இப்படி பல திட்டங்களை ஒத்துக் கொண்டால் அதற்கு நிதிக்கு எங்கே போவது; இருக்கும் திட்டங்களை முதலில் முடியுங்கள்' என, ஒரு முறை கட்கரியிடம், பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும், மஹாராஷ்டிராவில் கடந்த சட்டசபை தேர்தலில் தேவேந்திர பட்னவிசை, பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது கட்கரிக்கு பிடிக்கவில்லை. இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தும், கட்கரியை அமைச்சர் பதவியில் இருந்து துாக்க முடியாததற்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் அவருக்கு உள்ள நெருக்கம் தான் காரணமாம்.


தேர்தலுக்கு உதவும் ஆப்கானிஸ்தான்தற்போது ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத அமைப்பான தலிபான் அராஜகமாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த விவகாரத்தை அடுத்தாண்டு நடக்கவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தல்களில் பயன்படுத்த பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. உ.பி., முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் ஏற்கனவே தலிபான்கள் பற்றி பேசத் துவங்கி விட்டார்.

இங்குள்ள எதிர்க்கட்சியினர் சிலர், 'தலிபான்களின் போராட்டம் ஒரு சுதந்திர போராட்டம்' என்றனர். இதை மேற்கோள் காட்டி, 'பயங்கரவாதிகளை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள்' என பேச ஆரம்பித்துவிட்டார் யோகி ஆதித்யநாத். இதனால் அரண்டுபோன காங்., தலைவர்கள், 'தலிபான்களுடன் மத்திய அரசு ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளது' என்றனர். உ.பி.,யில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் தனித் தனியாகவே போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால் ஆப்கன் விவகாரத்தை தீவிரமாக பிரசாரம் செய்து, போட்டியே இல்லாமல் உ.பி.,யில் பா.ஜ., எளிதாக ஆட்சியைதக்க வைக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.


அடுத்த தமிழக கவர்னர் யார்?தமிழகத்தின் அடுத்த கவர்னராக, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட உள்ளதாக ஏற்கனவே பேசப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் யாருமே எதிர்பார்க்காத போது, யாருமே நினைக்காத ஒருவரை திடீரென மோடி நியமிப்பார் என்கின்றனர், டில்லியில் உள்ள பா.ஜ.,வினர்.

ரவிசங்கர் பிரசாத் சட்ட அமைச்சராக இருந்தவர்; இவரை விட ஒரு அதிரடி அரசியல்வாதியை தமிழக கவர்னராக நியமிக்க மோடி முடிவெடுத்து விட்டாராம். இந்த நபர் மீது மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளார். தி.மு.க., அரசுக்கு குடைச்சல் கொடுக்கக் கூடியவராக அவர் இருப்பார் என்கின்றனர். சமீபத்தில் டில்லி சென்ற, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பழனிசாமியும், பன்னீர்செல்வமும், கவர்னர் விவகாரம் குறித்தும் மோடியிடம் பேசியுள்ளதாகவும் பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.


ராஜினாமாவுக்கு தயார்சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது தான் மிச்சம். இரண்டு சபைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டன. ராஜ்யசபாவில் திரிணமுல் எம்.பி.,க்கள் மேஜை மேல் ஏறி கோஷமிட்டனர். ஒருவர் நடனம் ஆடினார்; சிலர் விசிலடித்தனர். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு, இதைப் பார்த்து கண்ணீர் விட்டார். பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்தார்.

பா.ஜ., மற்றும் காங்., மூத்த தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தியதை அடுத்து, ராஜினாமா முடிவை கைவிட்டார். இதற்கிடையே சபையில் கடும் அமளியில் ஈடுபட்ட சில எம்.பி.,க்களை பதவி நீக்கம் செய்வது குறித்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார் வெங்கையா நாயுடு.


தி.மு.க., - எம்.பி.,க்கள் அதிருப்திமேகதாது விவகாரத்தை பார்லிமென்டில் எழுப்ப தி.மு.க., - எம்.பி.,க்கள் முடிவு செய்திருந்தனர். கட்சி மேலிடமும் இது குறித்து அறிவித்திருந்தது. ஆனால், மழைக்கால கூட்டத் தொடரில் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை மட்டும் தி.மு.க.,வினர் எழுப்பினர். மேகதாது குறித்து எதுவும் பேசவில்லை. 'தி.மு.க.,வின் பார்லிமென்ட் குழு தலைவர் பாலு தான் இதற்கு காரணம்' என்கின்றனர், அதிருப்தியில் உள்ள தி.மு.க., - எம்.பி.,க்கள்.

'போன் ஒட்டு கேட்கும் விவகாரத்தை மட்டும் பேசுவோம்; மேகதாது பற்றி இப்போது வேண்டாம். நீங்கள் மேகதாதுவை எழுப்பினால், கர்நாடக காங்., - எம்.பி.,க்கள் உங்களை எதிர்ப்பர். 'இதனால் தேவையில்லாமல் பிரச்னை ஏற்படும் என பாலுவிடம் ராகுல் கூறியதால் தான் இந்த மாற்றம்' என்கின்றனர், தி.மு.க.,வினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
veeramani - karaikudi,இந்தியா
02-செப்-202110:22:16 IST Report Abuse
veeramani அடுத்த தமிழக கவர்னராக முழு தகுதி முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் திருமதி வசுந்தராஜே சிந்தியா என நினைக்கிறன்
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
26-ஆக-202104:42:07 IST Report Abuse
Bharathi காவிரியை பத்தி இங்கதான் ரொம்ப சவுண்ட் கொடுப்பாங்க. வெளியில ஒன்னும் பேச மாட்டாங்க. பேசுனா கர்நாடகாவில் இருக்குற அவங்க குடும்ப டிவி சேனல்கள், வியாபாரங்கள், சொத்துக்களுக்கு பிரச்னை வருமே.
Rate this:
Cancel
amicos - Bali,இந்தோனேசியா
22-ஆக-202118:36:28 IST Report Abuse
amicos சுப்ரமணிய ஸ்வாமிதான் அடுத்த தமிழ்நாடு கவர்னர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X