கழிவுநீர் கால்வாயைசீரமைத்த இளைஞர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் கால்வாயைசீரமைத்த இளைஞர்கள்

Added : ஆக 21, 2021
Share
கமுதி,-கமுதி பேரூராட்சிக்குஉட்பட்ட தெருவில் கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை கிராம இளைஞர்கள் சீரமைத்தனர்.கமுதி பேரூராட்சிக்குஉட்பட்ட வெள்ளையாபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் மராமத்து செய்யாததால் கழிவுநீர்

கமுதி,-கமுதி பேரூராட்சிக்குஉட்பட்ட தெருவில் கழிவுநீர் கால்வாயில் தேங்கியிருந்த கழிவுகளை கிராம இளைஞர்கள் சீரமைத்தனர்.கமுதி பேரூராட்சிக்குஉட்பட்ட வெள்ளையாபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் மராமத்து செய்யாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நின்றது.இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்தது. பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கழிவுநீர் கால்வாய்களில் உள்ள குப்பைகளை அகற்றம் செய்தனர். அதிகாரிகள் கழிவுநீர்தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X