பொது செய்தி

தமிழ்நாடு

பெரியகுளத்தில் மதநல்லிணக்க மொகரம் பண்டிகை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சாயல்குடி--சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமு நாச்சியார் தர்கா அமைந்துள்ளது. இங்கு மொகரம் பண்டிகைதினத்தில் மாலையில் இருந்து மறுநாள் அதிகாலை 6:00 மணிவரை சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த ஆக.10 அன்று காப்பு கட்டுதல் நடந்தது.அனைத்து மக்களும் ஒன்று கூடி, இணைந்து மொகரம் விழாவை கொண்டாடினர்.பெரிய குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்படும், அதே வேளையில் வெள்ளியிலான பிறை வடிவங்கள்,கை

சாயல்குடி--சாயல்குடி அருகே பெரியகுளத்தில் மாமு நாச்சியார் தர்கா அமைந்துள்ளது. இங்கு மொகரம் பண்டிகைதினத்தில் மாலையில் இருந்து மறுநாள் அதிகாலை 6:00 மணிவரை சிறப்பு வழிபாடு நடந்தது. கடந்த ஆக.10 அன்று காப்பு கட்டுதல் நடந்தது.அனைத்து மக்களும் ஒன்று கூடி, இணைந்து மொகரம் விழாவை கொண்டாடினர்.பெரிய குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்படும், அதே வேளையில் வெள்ளியிலான பிறை வடிவங்கள்,கை கூப்பி தொழும் உருவ வடிவங்களை பல்லக்கில் வைத்து ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் நடந்தது. மாமுநாச்சியார் இருப்பிடத்தில் உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டியும் சிறப்பு மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கையில் பச்சை பிறைக் கொடியுடன் குண்டத்தில் இறங்கினர். பெண்களின் தலையில் அனல் கங்குகளை கொட்டியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். கொடியிறக்கம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X