தற்கொலைக்கு விஷம் வழங்குவதா? 'இ - காமர்ஸ்' நிறுவனம் மீது புகார்!

Added : ஆக 21, 2021
Share
Advertisement
இந்துார்:மகன் தற்கொலை செய்ய விஷம் வழங்கியதாக, 'இ - காமர்ஸ்' நிறுவனம் எனப்படும் மின்னணு வர்த்தக நிறுவனம் ஒன்றின் மீது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவுமத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்தவர் ரஞ்சித் வர்மா; பழ வியாபாரி. இவரது மகன் ஆதித்யன், 29. இவர் சமீபத்தில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

இந்துார்:மகன் தற்கொலை செய்ய விஷம் வழங்கியதாக, 'இ - காமர்ஸ்' நிறுவனம் எனப்படும் மின்னணு வர்த்தக நிறுவனம் ஒன்றின் மீது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.


வழக்கு பதிவு

மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்தவர் ரஞ்சித் வர்மா; பழ வியாபாரி. இவரது மகன் ஆதித்யன், 29. இவர் சமீபத்தில் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆதித்யன், மறுநாள் இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்துார் போலீசில் ரஞ்சித் வர்மா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:என் மகன், 'சல்பாஸ்' என்ற விஷத்தை குடித்து தற்கொலை செய்துள்ளார்.


'நோட்டீஸ்'@


@



இந்த விஷத்தை, அவர் மின்னணு வர்த்தக நிறுவனம் ஒன்றின் இணையதளம் வாயிலாக வாங்கி உள்ளார். அந்த நிறுவனம் எந்த வித ஆவணத்தையும் கேட்காமல் சல்பாஸ் விஷத்தை வழங்கியுள்ளது. அந்த நிறுவனம் விஷத்தை வழங்காமல் இருந்திருந்தால், என் மகன் தற்கொலை செய்திருக்க மாட்டார். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்னணு வர்த்தக நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு, போலீசார் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X