போலீஸ் டைரி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மொபைல் திருடன் கைதுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ராமசாமி தெரு என்.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் குமார், 45. இவர், மொபைல் போன் திருட்டு வழக்கில் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த மாதம் சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொபைல் போன் திருட்டு சம்பந்தமாக, குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், ஐந்து மொபைல் போன்கள் வழிப்பறி செய்ததாக

மொபைல் திருடன் கைது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ராமசாமி தெரு என்.ஜி.ஓ., நகரைச் சேர்ந்தவர் குமார், 45. இவர், மொபைல் போன் திருட்டு வழக்கில் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த மாதம் சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மொபைல் போன் திருட்டு சம்பந்தமாக, குமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், ஐந்து மொபைல் போன்கள் வழிப்பறி செய்ததாக ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், விற்கப்பட்ட போன்களை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

நர்சிங் மாணவி தற்கொலை
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், கனகம்மாசத்திரம் குளக்கரை பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன் மகள் ஹரிபிரியா, 20. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவருக்கும், 2018ல் திருமணம் நடந்தது. ஓராண்டுக்கு முன், கணவர், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில், கணவரை பிரிந்த ஹரிபிரியா, தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.பின் தாய் வீட்டில் இருந்து ஹரிபிரியா திருவள்ளூரில் உள்ள தனியார் நர்சிங் பள்ளியில் படித்து வந்தார். கடந்த, 19ல், ஹரிபிரியா , பெற்றோரிடம், தனக்கு வயிற்று வலி உள்ளதால், பயிற்சி பள்ளிக்கு செல்லவில்லை. தனியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹரிபிரியா துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சரக்கு வேன் பறிமுதல்

கடம்பத்துார்: கடம்பத்துார் அடுத்த, புதுமாவிலங்கை கூவம் ஆற்று பகுதியில், கடம்பத்துார் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.

அவ்வழியாக வந்த 'மகேந்திரா' சரக்கு வேனை நிறுத்தியபோது, ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். வாகனத்தில் 1 யூனிட் ஆற்று மணல் இருந்தது. வேனை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து கடம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X