சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முறைகேடு புகார்: போலீஸ் அதிகாரிகள் பெயர் வெளியீடு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக காவல் துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கின், முதல் தகவல் அறிக்கையில் 14 காவல் துறை அதிகாரிகள்; இரு நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.தமிழக காவல் துறைக்கு, ரேடியோ, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை, தமிழக

சென்னை:தமிழக காவல் துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கின், முதல் தகவல் அறிக்கையில் 14 காவல் துறை அதிகாரிகள்; இரு நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக காவல் துறைக்கு, ரேடியோ, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை, தமிழக காவல் துறையின் தொழில்நுட்ப சேவை பிரிவு மேற்கொண்டு வருகிறது. இந்த உபகரணங்களை வாங்க பல்வேறு நிறுவனங்களுக்கு, 'டெண்டர்'கள் வழங்கப்பட்டன.இதில், ஊழல் நடந்திருப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தன; விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக 2019ல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், அப்போதைய தொழில்நுட்ப எஸ்.பி.,யாக இருந்த அன்புசெழியன் உள்ளிட்ட 14 காவல் துறை அதிகாரிகள் மீதும், இரண்டு தனியார் நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.இந்நிலையில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன் விபரம்:

* தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி., - இரண்டு ஏ.டி.எஸ்.பி., ஒரு ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி., ஏழு இன்ஸ்பெக்டர்கள், மூன்று எஸ்.ஐ.,க்கள், இரு தனியார் நிறுவனங்கள் என 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

* தொழில்நுட்ப உபகரணங்கள் தொடர்பான முறைகேட்டில், 'வி லிங்க்' நிறுவனத்தை அடுத்து, 'லுக்மேன் எலக்ட்ரோப்ளாஸ்ட்' என்ற நிறுவனமும் ஈடுபட்டுள்ளதுl மேலும், 308 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்ட, 'சிசிடிவி கேமரா' செயல்பாடு குறித்த சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரத்தில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது

* தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி., உள்ளிட்ட 14 அதிகாரிகள் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது, தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி., அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுl உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல், காவல் துறையின் சிறப்பு நிதியை தவறாக பயன்படுத்தி, ஜி.பி.எஸ்., கருவிகள் வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது

* இந்த முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள், அரசு டெண்டரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.பி., அன்புசெழியன் உட்பட, யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் தொடர்ந்து தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், பல்வேறு முக்கிய வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை, லஞ்ச ஒழிப்பு துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், காவல் துறையில் நடந்த முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, இதுவரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X