சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வார்டு உறுப்பினர் வீட்டில் பணம், நகை கொள்ளை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பொன்னேரி : திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஊராட்சி வார்டு உறுப்பினரின் வீட்டின் பூட்டை உடைத்து, 20 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பொன்னேரி அடுத்த, ஆத்திரேயமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி, 35; ஆலாடு ஊராட்சி வார்டு உறுப்பினர். இவர், கடந்த, 19ம் தேதி, குடும்பத்தினருடன், உறவினர் திருமண நிகழ்ச்சியில்

பொன்னேரி : திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ஊராட்சி வார்டு உறுப்பினரின் வீட்டின் பூட்டை உடைத்து, 20 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி அடுத்த, ஆத்திரேயமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி, 35; ஆலாடு ஊராட்சி வார்டு உறுப்பினர். இவர், கடந்த, 19ம் தேதி, குடும்பத்தினருடன், உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, பாடியநல்லுார் சென்றிருந்தார்.நேற்று காலை, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அருகில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலையடுத்து, பூங்கொடி உடனடியாக வீடு திரும்பினார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 20 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.சமீபத்தில், மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு பெற்றிருந்த கடனை திருப்பி தருவதற்காக வைத்திருந்த பணமும், சிறு சிறு சேமிப்பு மூலம், வாங்கி வைத்திருந்த நகைகளும் கொள்ளை போனதாக பூங்கொடி தெரிவித்து உள்ளார்.பொன்னேரி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X