பொது செய்தி

தமிழ்நாடு

இரு பிரசவத்தில் எடை குறைவுடன் 6 குழந்தை: தீவிர சிகிச்சையில் தேற்றிய டாக்டர்கள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சிவகங்கை--சிவகங்கையில் இரு கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் எடை குறைந்து பிறந்த தலா 3 குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை அளித்ததின் மூலம் வழக்கமான குழந்தைக்குரிய எடையை பெற்றுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தினைக்குளம் சித்திரவேல் மனைவி பொன்ராக்கு. இவர் 2019 செப்டம்பரில் பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்ந்தார். செப்.., 4 ம் தேதி

சிவகங்கை--சிவகங்கையில் இரு கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் எடை குறைந்து பிறந்த தலா 3 குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சை அளித்ததின் மூலம் வழக்கமான குழந்தைக்குரிய எடையை பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தினைக்குளம் சித்திரவேல் மனைவி பொன்ராக்கு. இவர் 2019 செப்டம்பரில் பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் சேர்ந்தார். செப்.., 4 ம் தேதி நடந்த அறுவை சிகிச்சையில் எடை குறைவாக 2 பெண் (1.5 கிலோ), ஒரு ஆண் (1.4 கிலோ) பிறந்தது. செப்.,15 ம் தேதி மானாமதுரை அருகே வேதியரேந்தல் தினேஷ்குமார் மனைவி கோமதி கர்ப்பிணியாக இங்கு சேர்ந்தார். அவருக்கும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்தது. இதில் 2 பெண் (1.35 கிலோ, 1.15 கிலோ) ஒரு ஆண் குழந்தை (0.74 கிராம்) எடையில் பிறந்தனர். இவ்விரு தாய்மார்களின் 6 குழந்தைகளை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து நல்ல நிலையில் தாய்ப்பால், ஊட்டச்சத்து எடுத்து வளரும் விதத்தில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பினர்.தொடர்ந்து மகப்பேறு பிரிவு தலைவர் காயத்ரி, குழந்தைகள் நலப்பிரிவு தலைவர் குணா ஆகியோரின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது இரு தாய்மார்களின் 6 குழந்தைகளும் வழக்கமான குழந்தைகளுக்கான எடையை பெற்று நல்ல படியாக உள்ளனர். 3 குழந்தைகளை பெற்ற தாய்மார்கள் சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X