சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு குழு மாமல்லபுரத்தில் சோதனை

Added : ஆக 21, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், உணவுப்பொருள் விற்பனை கடைகள்,உணவகங்களில் சோதனை நடத்த, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.இதையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய குழுவினர், மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர், மாமல்லபுரத்தில் நேற்று சோதனை நடத்தினர்.கடைகளில் காலாவதியான
 உணவு பாதுகாப்பு குழு மாமல்லபுரத்தில் சோதனை

மாமல்லபுரம் : மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், உணவுப்பொருள் விற்பனை கடைகள்,உணவகங்களில் சோதனை நடத்த, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய குழுவினர், மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர், மாமல்லபுரத்தில் நேற்று சோதனை நடத்தினர்.கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், பாட்டில் குடிநீர், அரசு தடை விதித்துள்ள குட்கா உள்ளிட்ட பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்கின்றனரா, உணவு பாதுகாப்பு ஆணைய உரிமம், உள்ளாட்சி தொழில் உரிமம் ஆகியவை பெற்றுள்ளனரா என ஆய்வு செய்தனர்.

காலாவதி பொருட்கள், பிளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களை பறிமுதல் செய்து, அபராதமும் விதித்தனர். ஓட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகளில், கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என சோதித்தனர். இதில், 106 கடைகள், ரெஸ்டாரென்டுகளில் சோதனை நடத்தி, 31.7 கிலோ கலப்பட, காலாவதி இறைச்சி பறிமுதல் செய்து, பேரூராட்சி நிர்வாகத்தினர், 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக, உணவு பாதுகாப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X