பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு நிவாரணம்; சங்க தலைவர் வேண்டுகோள்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சிவகங்கை--கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் வருவாய் இன்றி தவிக்கும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.4000 நிவாரணம் வழங்க வேண்டும் என அப்துல்கலாம் மாற்றுத் திறனாளி நல சங்க தலைவர் ஆர்.கண்ணன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் முதலாவது அலை கொரோனா ஊரடங்கால் பாதித்த தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1000 நிவாரண தொகை

சிவகங்கை--கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் வருவாய் இன்றி தவிக்கும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.4000 நிவாரணம் வழங்க வேண்டும் என அப்துல்கலாம் மாற்றுத் திறனாளி நல சங்க தலைவர் ஆர்.கண்ணன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியில் முதலாவது அலை கொரோனா ஊரடங்கால் பாதித்த தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1000 நிவாரண தொகை வழங்கினர். இரண்டாம் அலை கொரோனா ஊரடங்கால் வருவாய் இன்றி வாழ்வாதாரம் நடத்தவே முடியாமல் மாற்றுத்திறனாளிகள் தவிக்கின்றனர். இவர்களுக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.4000 வழங்க வேண்டும். தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 1.47 லட்சம் மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி அரசு வேலை வாய்ப்பு, கல்வி சேர்க்கையில் 3 சதவீத ஒதுக்கீடு அளித்தாலே கல்வி, வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன் அடைந்திருப்பர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆட்சியில் அமர்ந்தால் மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தனர். தி.மு.க., வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்து 100 நாட்களை கடந்த பின்னரும் மாற்றுத்திறனாளிக்கான அறிவிப்பு வெளியாகவில்லை. தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X