பொது செய்தி

இந்தியா

திறப்பு! நாளை முதல் 9, 10, பி.யு.சி., வகுப்புகள்...: முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில் நாளை முதல், ஒன்பது, 10ம் வகுப்பு மற்றும் பி.யு.சி., வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன; அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. ''மாணவர்கள் பள்ளிக்கு வந்து, கல்வி கற்க வேண்டும். மாணவர்களின் நலனே முக்கியம்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுத்துள்ளார்.கொரோனாவால் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது ஓரளவு குறைந்து
 திறப்பு! நாளை முதல் 9, 10, பி.யு.சி., வகுப்புகள்...: முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூரு:கர்நாடகாவில் நாளை முதல், ஒன்பது, 10ம் வகுப்பு மற்றும் பி.யு.சி., வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன; அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

''மாணவர்கள் பள்ளிக்கு வந்து, கல்வி கற்க வேண்டும். மாணவர்களின் நலனே முக்கியம்,'' என முதல்வர் பசவராஜ் பொம்மை அழைப்பு விடுத்துள்ளார்.கொரோனாவால் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது ஓரளவு குறைந்து வருவதால், பள்ளி, கல்லுாரிகள் திறப்பது குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, ஒன்பது, 10ம் வகுப்பு மற்றும் பி.யு.சி., வகுப்புகள் துவங்க அனுமதி வழங்கினர். அதுவும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தினர்.அதன் அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட்டன.


அறிவுறுத்தல்

இந்நிலையில், நாளை முதல், ஒன்பது, 10ம் வகுப்பு மற்றும் பி.யு.சி., வகுப்புகள் துவங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வகுப்பறைகள், மேஜைகள், இருக்கைகள், நுாலகம், உணவகம் என அனைத்து பகுதிகளும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டுள்ளன. முக கவசம் அணிவது, ஆறடி சமூக விலகலை கடைப்பிடிப்பது, கைகளை சுத்தபடுத்திக் கொள்ளவது போன்ற தகவல்கள் அடங்கிய பலகை, பள்ளி, கல்லுாரிகளில் பொருத்தப்பட உள்ளன.

ஒரு வேளை வகுப்பறையில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லுாரி ஒரு வாரத்துக்கு மூடப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படும். அதன் பின் மீண்டும் திறக்கப்படும்.தற்போது, கொரோனா பரவல், 2 சதவீதம் குறைவான மாவட்டங்களில் மட்டும், நாளை வகுப்பறைகள் செயல்படும்.

இது குறித்து, முதல்வர் பசவராஜ் பொம்மை, பெங்களூரில் கூறியதாவது:பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகள் கடைப்பிடிப்பது தொடர்பாக, அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.


ஆய்வு

பெற்றோரின் அனுமதி இருந்தால் மட்டுமே மாணவர்கள் வகுப்பறைகளில் சேர்க்கப்படுவர். சமூக விலகலை கடைப்பிடித்து, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் வகுப்புகள் நடத்தப்படும்.வரும் 23ல், நானும் சில பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவேன். மாணவர்கள் பள்ளிக்கு வந்து, கல்வி கற்க வேண்டும். மாணவர்களின் நலனே முக்கியம்.மாணவர்கள் பள்ளிக்கு வரும் வகையில் தைரியமூட்டப்படும். படிப்படியாக மாணவர்கள் வருகை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X