தமிழ்நாடு

அவதி:ஊராட்சியில் போதிய மழை நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை; பொதுமக்கள் அவதி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
இவ்வொன்றியத்தில் காரைக்குடி -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் போதிய மழை நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. சாலையின் உயரத்தை மட்டும் அடிக்கடி அதிகப்படுத்தியதால் கிராமத்துக்குச் செல்லும் சாலைகளும் குடியிருப்புகளும் பள்ளத்துக்குள் போனது. மழைநீரும் கழிவுநீரும் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேற வழியில்லாத நிலை ஏற்பட்டது.சில மாதங்களாக
 அவதி:ஊராட்சியில் போதிய மழை நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை; பொதுமக்கள் அவதி

இவ்வொன்றியத்தில் காரைக்குடி -திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊராட்சியில் போதிய மழை நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. சாலையின் உயரத்தை மட்டும் அடிக்கடி அதிகப்படுத்தியதால் கிராமத்துக்குச் செல்லும் சாலைகளும் குடியிருப்புகளும் பள்ளத்துக்குள் போனது.

மழைநீரும் கழிவுநீரும் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியேற வழியில்லாத நிலை ஏற்பட்டது.சில மாதங்களாக இக்கிராமம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கும் நிலையில் இங்கு கால்வாய் அமைக்காமல் சாலையை மட்டும் அகலப்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் கால்வாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் தெரியவில்லை. மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் அனுபவிக்கும் சங்கடத்திற்கு அளவே இல்லை. மழைக்காலம் வந்துவிட்டால் இப்பகுதி மக்கள் பலர் தண்ணீருக்கும் கொசுக்களுக்கும் பயந்து குழந்தைகளை வெளியூர் அனுப்பிவிடும் அவலம் உள்ளது.

நேற்று பகலில் பெய்த லேசான மழைக்கே வீடுகளும் தெருக்களும் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் கூறியதாவது: மழைக்காலங்களில் வீடு முன்பாக முழங்கால் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி விடுவதால் மாதக்கணக்கில் துர்நாற்றத்தோடு மக்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளது.பலமுறை டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 7 ஆண்டுகளாக இதே கஷ்டத்தை அனுபவிக்கிறோம்.

மற்ற ஊர்களைப் போல் மழைநீர் வெளியேற நெடுஞ்சாலை துறையினரே சாலையோரத்தில் கால்வாய் அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.சதுர்வேதமங்கலம், ஆக.22-சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் மழைநீர் செல்ல வழியில்லாததால் சாலைகளிலும், வீடுகள் முன்பாகவும் தேங்குவதால் மக்கள் அவதிப்படுவது தொடர்கதையாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X