சுங்க கட்டண உயர்வு: ராமதாஸ் எதிர்ப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுங்க கட்டண உயர்வு: ராமதாஸ் எதிர்ப்பு

Added : ஆக 21, 2021
Share
சென்னை:'சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமான செலவு, வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள, 23 சுங்கச் சாவடிகளில், செப்., 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை:'சுங்க கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமான செலவு, வருவாய் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள, 23 சுங்கச் சாவடிகளில், செப்., 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் ௮ சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. எந்த விதமான வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகளில், ஏப்ரல் 24ல் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை தவிர்த்து, மீதமுள்ள 24 சுங்கச்சாவடிகளில், செப்., 1 முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.


15 ஆண்டுகள்

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு, அதிகபட்சமாக, 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே, முழுமையான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.அதன்பின், பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே, வசூலிக்கப்பட வேண்டும் என்பது விதி.ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், பெரும்பாலானவை அமைக்கப் பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன.

அதேபோல, பெரும்பாலான சாலைகளுக்கான முதலீடு எடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அந்த சாலைகளில் பராமரிப்புக்காக 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், எந்த காரணத்தையும் கூறாமலேயே, அனைத்து நெடுஞ்சாலைகளிலும், முழுமையான சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


வெளிப்படைத் தன்மை

மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில், வெளிப்படைத் தன்மை அவசியம். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க ஆன செலவு, அவற்றில் இருந்து வசூலிக்கப்பட்ட கட்டணம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட வேண்டும். அதுவரை, சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X