அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுக்கு எதிராக போராட்டம்: அழகிரி

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை:'மக்களை கடுமையாக பாதிக்கிற, வரி விதிப்புகளை, பா.ஜ., அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன. வரலாறு காணாத, பொருளாதார பேரழிவை, மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை உயர்த்தி விட்டு, அதற்கு நிதி

சென்னை:'மக்களை கடுமையாக பாதிக்கிற, வரி விதிப்புகளை, பா.ஜ., அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின், மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன. வரலாறு காணாத, பொருளாதார பேரழிவை, மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை உயர்த்தி விட்டு, அதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியாயம் பேசுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயல். ஏழு ஆண்டுகளாக, பா.ஜ., ஆட்சியில், கலால் வரி 22.34 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

கடந்த 2020 - 21ம் ஆண்டில் மட்டும், பெட்ரோல், டீசலில் கலால் வரியாக 4.53 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, மிகக் கொடூரமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மக்கள் மீது கருணை இல்லாமல், கலால் வரியை உயர்த்தியதால், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை விட, மக்கள் விரோத நடவடிக்கை, வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆனால், 'கார்ப்பரேட்' வரி ஒரு ஆண்டில், 1 லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மக்களை கடுமையாக பாதிக்கிற வரி விதிப்புகளை, பா.ஜ., அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், மக்களை திரட்டி, போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X