பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவக் கல்லுாரி கட்டுமான பணி ஆய்வு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி கட்டுமான பணியை, கலெக்டர் ஆய்வு செய்தார்.திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில், 380 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.இங்கு, ஐந்து அடுக்கு கல்லுாரி வளாகம், மாணவர் மற்றும் செவிலியர், மருத்துவர்கள் தங்கும் விடுதி, கூட்ட அரங்கு உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டே, மாணவர்
 மருத்துவக் கல்லுாரி கட்டுமான பணி ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி கட்டுமான பணியை, கலெக்டர் ஆய்வு செய்தார்.திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி, கலெக்டர் அலுவலக வளாகத்தில், 380 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.இங்கு, ஐந்து அடுக்கு கல்லுாரி வளாகம், மாணவர் மற்றும் செவிலியர், மருத்துவர்கள் தங்கும் விடுதி, கூட்ட அரங்கு உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டே, மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், மருத்துவக்கல்லுாரி வளாகத்தை, கலெக்டர்அல்பி ஜான் வர்கீஸ், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கட்டுமான பணியின் தரம், கட்டப்பட்ட கட்டடங்களின் உறுதி தன்மை குறித்து, பொதுப் பணி துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார்.பின், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும், பணியையும் ஆய்வு மேற்கொண்டார். உடன், கட்டுமான செயற்பொறியாளர் முத்தமிழரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X