அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு பா.ஜ., எதிர்ப்பு

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:'சட்டசபையில் கூற வேண்டிய விஷயங்களை, அமைச்சர்கள் வெளியே கூறக் கூடாது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபை உரிமை மீறல், தமிழகத்தில் நித்தமும் நடக்கிறது. சட்டசபை நடக்கும் போது, அமைச்சர்கள், தங்களது துறைகளை பார்வையிட, தவறை கண்டுபிடிக்க, முறைகேடுகளை கண்டறிய, எல்லா அதிகாரமும் உண்டு.அங்கு நடந்த முறைகேடுகள், பொருளாதார

சென்னை:'சட்டசபையில் கூற வேண்டிய விஷயங்களை, அமைச்சர்கள் வெளியே கூறக் கூடாது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:சட்டசபை உரிமை மீறல், தமிழகத்தில் நித்தமும் நடக்கிறது. சட்டசபை நடக்கும் போது, அமைச்சர்கள், தங்களது துறைகளை பார்வையிட, தவறை கண்டுபிடிக்க, முறைகேடுகளை கண்டறிய, எல்லா அதிகாரமும் உண்டு.அங்கு நடந்த முறைகேடுகள், பொருளாதார இழப்பு, வருவாய் இழப்பு பற்றி, பத்திரிக்கையாளர்களிடம் பேச, அமைச்சர்களுக்கு உரிமை கிடையாது.

சபை நடக்கும் போது, அங்கே கூற கடமைப்பட்டவர்கள், அமைச்சர்கள்.சட்டசபையில் கூற வேண்டிய விஷயங்களை, வெளியே கூறக்கூடாது. அவ்வாறு கூறினால், சபையை மதிக்காத செயலாக கருதப்படும். சபை உரிமை மீறல் செயலாக, சபாநாயகர் கருத வேண்டும். உதாரணம், மின் துறை, குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர்களின் சந்திப்பு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஆக-202102:11:10 IST Report Abuse
தமிழவேல் திருட்டுத்தனம் நடந்ததை மக்களுக்கு சொல்றது தவறா ? இப்போ கட்டுண வீடு இடியிது, எத்தனையோ டன் நிலக்கரி மாயமாகி இருக்கு. அதையெல்லாம் எங்களுக்குத் தெரிய படுத்தக் கூடாதா ? ?
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-ஆக-202102:01:58 IST Report Abuse
BASKAR TETCHANA அப்பாவி அப்பாவு இருக்கும் வரை தி.மு.க. எம்.எல்.எ க்கள் இப்படித்தான் நடப்பார்கள். அப்பாவுக்கு ஒன்றுமே தெரியாது. ஸ்டாலின் அவரை சும்மா ஒரு பொம்மை போல் வைத்துள்ளார். சட்டமும் தெரியாது ஒன்றும் தெரியாது. அவர் எப்போதும் ஆளுங்கட்சிக்கு தான் தலையாட்டுவார். ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X