அமைச்சர்களுக்கு பா.ஜ., எதிர்ப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு பா.ஜ., எதிர்ப்பு

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (2)
Share
சென்னை:'சட்டசபையில் கூற வேண்டிய விஷயங்களை, அமைச்சர்கள் வெளியே கூறக் கூடாது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபை உரிமை மீறல், தமிழகத்தில் நித்தமும் நடக்கிறது. சட்டசபை நடக்கும் போது, அமைச்சர்கள், தங்களது துறைகளை பார்வையிட, தவறை கண்டுபிடிக்க, முறைகேடுகளை கண்டறிய, எல்லா அதிகாரமும் உண்டு.அங்கு நடந்த முறைகேடுகள், பொருளாதார

சென்னை:'சட்டசபையில் கூற வேண்டிய விஷயங்களை, அமைச்சர்கள் வெளியே கூறக் கூடாது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:சட்டசபை உரிமை மீறல், தமிழகத்தில் நித்தமும் நடக்கிறது. சட்டசபை நடக்கும் போது, அமைச்சர்கள், தங்களது துறைகளை பார்வையிட, தவறை கண்டுபிடிக்க, முறைகேடுகளை கண்டறிய, எல்லா அதிகாரமும் உண்டு.அங்கு நடந்த முறைகேடுகள், பொருளாதார இழப்பு, வருவாய் இழப்பு பற்றி, பத்திரிக்கையாளர்களிடம் பேச, அமைச்சர்களுக்கு உரிமை கிடையாது.

சபை நடக்கும் போது, அங்கே கூற கடமைப்பட்டவர்கள், அமைச்சர்கள்.சட்டசபையில் கூற வேண்டிய விஷயங்களை, வெளியே கூறக்கூடாது. அவ்வாறு கூறினால், சபையை மதிக்காத செயலாக கருதப்படும். சபை உரிமை மீறல் செயலாக, சபாநாயகர் கருத வேண்டும். உதாரணம், மின் துறை, குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர்களின் சந்திப்பு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X