பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்; ஏலம் விட மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
வேடசந்துார்-போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பயன்பாடுள்ள வாகனங்களை, பொது மக்கள்பயன்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியிலேயே ஏலத்திற்கு விட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் நுாற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கரவாகனங்கள், வழக்குகளில் சிக்கியதால் ஸ்டேஷன் அருகிலேயே பல ஆண்டு களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. டி.எஸ்.பி.,

வேடசந்துார்-போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பயன்பாடுள்ள வாகனங்களை, பொது மக்கள்பயன்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியிலேயே ஏலத்திற்கு விட மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் நுாற்றுக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கரவாகனங்கள், வழக்குகளில் சிக்கியதால் ஸ்டேஷன் அருகிலேயே பல ஆண்டு களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. டி.எஸ்.பி., அலுவலகம் அருகிலும் நான்கு சக்கர வாகனங்கள்நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில், வழக்கு விசாரணைக்கான வாகனங்களை தவிரமீதியுள்ள வாகனங்கள் பயன்பாடற்று போகும் நிலை உள்ளதால், அவற்றை பொது மக்கள் பயன்படுத்தும் வகையிலும், அரசுக்கு வருமானம் கிடைக்கும் வகையிலும் பொது ஏலத்திற்குவிடவேண்டும். அதுவும் அந்தந்த தாலுகா அளவிலான டி.எஸ்.பி., அலுவலகத்திலேயே ஏலம் விடவேண்டும்.இன்னும் ஒரு சில ஆண்டுகளில், பழமையான இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதியில்லாமல் போகும். மேலும் பல வாகனங்களில் உதிரி பாகங்களும் காணாமல் போகும் நிலையிலும் உள்ளன. தற்போதுள்ள பயன்பாடுடையஎண்ணற்ற வாகனங்களை, பொது ஏலத்திற்கு விட மாவட்ட எஸ்.பி., முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X