தமிழ்நாடு

*சைபர் குற்றங்களை தடுக்க ..., டயல் செய்யுங்க உடனே

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்- -'சைபர்' மோசடியில் பணத்தை இழந்தவர்கள் '155260' என்ற எண்ணிற்கு உடனே அழைத்து புகார் செய்தால் 48 மணி நேரத்திற்குள் மீட்க வாய்ப்புள்ளது' என திண்டுக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சைபர் கிரைமுக்கென தனி அலுவலகம் துவங்கி சில மாதங்களே ஆகின்றன. ஆனால், புகார்களோ நாளுக்கு நாள் குவிந்த வண்ணம் உள்ளன. சைபர் கிரைமில் பல்வேறு நுாதன மோசடிகள்

திண்டுக்கல்- -'சைபர்' மோசடியில் பணத்தை இழந்தவர்கள் '155260' என்ற எண்ணிற்கு உடனே அழைத்து புகார் செய்தால் 48 மணி நேரத்திற்குள் மீட்க வாய்ப்புள்ளது' என திண்டுக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சைபர் கிரைமுக்கென தனி அலுவலகம் துவங்கி சில மாதங்களே ஆகின்றன. ஆனால், புகார்களோ நாளுக்கு நாள் குவிந்த வண்ணம் உள்ளன. சைபர் கிரைமில் பல்வேறு நுாதன மோசடிகள் நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.குறும்படம், சமூக வலைத்தளம் என பலவற்றின் மூலமாக போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டுதான் உள்ளன. பெரும்பாலும் படித்தவர்களே அதிகம் பணத்தை பறிகொடுக்கின்றனர்.

முகநுால் முதல் ஓ.டி.பி., வரை மோசடிகள் நடக்கிறது. அதே வேளையில் பொதுமக்கள் புகார் அளிப்பதில் தாமதம் காட்டி வருகின்றனர். இது குற்றவாளிகள் தப்பிச் செல்ல எளிதாகி விடுகிறது.சமீபத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நைஜீரிய இளைஞர் கைது செய்யப்பட்டது உடனடி புகாரினால்தான். எனவே, பொதுமக்கள் தாங்கள் ஏமாந்ததாக உணர்ந்தாலோ, சந்தேகம் ஏற்பட்டாலோ தாமதம் செய்யாமல் உடனே சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும்.

போலீசார் கூறுகையில், ''பண மோசடி தொடர்பான புகார்களை அதிகபட்சம் 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டோர் புகார் அளித்தால் மீட்க வாய்ப்புள்ளது. மோசடி நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை அவர்கள் எடுக்கும் முன்பு முடக்க முடியும். இதுபோன்ற புகார்களுக்கு ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. "155260" என்ற எண்ணிற்கு அழைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X