அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் ஆவின் பொருட்கள் ஏற்றுமதி விற்பனையாளர்கள் நியமனம்

Added : ஆக 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய, மொத்த விற்பனையாளர்களுக்கு, வணிக ஒப்பந்த ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.ஆவின் நிறுவனம், 4.36 லட்சம் பால் முகவர்கள் வழியே, தினமும் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இதில் 26.68 லட்சம் லிட்டர் பாலை, தினமும் விற்பனை செய்கிறது. பால் மற்றும் பால்
 வெளிநாடுகளில் ஆவின் பொருட்கள் ஏற்றுமதி விற்பனையாளர்கள் நியமனம்

சென்னை:ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களை, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய, மொத்த விற்பனையாளர்களுக்கு, வணிக ஒப்பந்த ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

ஆவின் நிறுவனம், 4.36 லட்சம் பால் முகவர்கள் வழியே, தினமும் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இதில் 26.68 லட்சம் லிட்டர் பாலை, தினமும் விற்பனை செய்கிறது. பால் மற்றும் பால் பொருட்களை முகவர்கள் வழியாக சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.


எதிர்பார்ப்பு

முதல்வர் தலைமையில், கடந்த மாதம் 19ம் தேதி பால் வளத் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் உபபொருட்களை தயாரித்து ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யவும், துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஓமன், கத்தார், கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் விற்பனையை உலகெங்கும் விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்றுமதி செய்ய, முதல் கட்டமாக ஆறு மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுடனான வணிக ஒப்பந்த ஆணையை, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


நலத்திட்ட உதவிகள்

மேலும், ஆவின் நிறுவனத்தில் பணியின்போது இறந்த 47 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.அண்ணா பால் உற்பத்தியாளர்கள் நல நிதி திட்டத்தின் கீழ், 44 பயனாளிகளுக்கு 1.04 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், பால் வளத் துறை அமைச்சர் நாசர், தலைமை செயலர் இறையன்பு, பால் வளத்துறை செயலர் ஜவஹர், ஆவின் மேலாண்மை இயக்குனர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
22-ஆக-202119:34:50 IST Report Abuse
DVRR வாஹ் வாஹ் என்ன அறிவுக்கொழுந்து உள்ளூரிலியே தகிடுதத்தம். இந்த அரசின் ஒரே தாரக மந்திரம் ஓம் டாஸ்மாக்கினாடு நாசனமாய நமஹ
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
22-ஆக-202115:49:26 IST Report Abuse
periasamy அமுல் அரை நூற்றாண்டு காலமாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப் படுகிறது நுகர்வோர்கள் பெரும்பாலும் இந்திய மக்கள்தான் அதுபோல ஆவின் வந்தால் தமிழர்கள் நுகர்வோரை இருந்தாலே போதும் கிட்டத்தட்ட்ட ஐந்தாறு மில்லியன் தமிழர்கள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
22-ஆக-202115:30:56 IST Report Abuse
periasamy தமிழக முதல்வர் மிகவும் பாராட்ட பட செயல்களில் ஈடுபட்டுள்ளார்
Rate this:
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
22-ஆக-202117:51:17 IST Report Abuse
தமிழ்ச்செல்வன்எந்த ஆட்சியில் இருந்து செயல்படுத்தப்படுகிறது ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X