பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டிற்கு வராத தாண்டிக்குடி வனக்குடியிருப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
தாண்டிக்குடி--தாண்டிக்குடி குப்பம்மாள்பட்டியில் கட்டப்பட்ட வன குடியிருப்பு ஆண்டுக் கணக்கில் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது.கன்னிவாடி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வளாகம் புதர்மண்டி கிடக்கிறது. தற்போது இங்குள்ள வனத்துறையினர்

தாண்டிக்குடி--தாண்டிக்குடி குப்பம்மாள்பட்டியில் கட்டப்பட்ட வன குடியிருப்பு ஆண்டுக் கணக்கில் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது.கன்னிவாடி வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வளாகம் புதர்மண்டி கிடக்கிறது. தற்போது இங்குள்ள வனத்துறையினர் தரைப்பகுதியில் இருந்து வந்து தங்களது பகுதிகளை நாள்தோறும் கண்காணிக்கின்றனர். இவர்களின் சிரமத்தை தவிர்க்கும் நோக்கில் இங்கேயே தங்கியிருக்க குடியிருப்பு கட்டப்பட்டது. பயன்பாட்டுக்கு வராததால் ரூ. பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். எனவே, இதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X