அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதிக்கு மின் ஊழியர்கள் ஊதியம்

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை:மின் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான, 10.58 கோடி ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வரிடம் வழங்கினார்.கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, பல்வேறு தரப்பினரும் முதல்வரை சந்தித்து, நிதி அளித்து வருகின்றனர். நேற்று, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்தார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின்,
 முதல்வர் நிவாரண நிதிக்கு மின் ஊழியர்கள் ஊதியம்

சென்னை:மின் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான, 10.58 கோடி ரூபாய்க்கான காசோலையை, அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வரிடம் வழங்கினார்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, பல்வேறு தரப்பினரும் முதல்வரை சந்தித்து, நிதி அளித்து வருகின்றனர். நேற்று, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்தார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின், ஒரு நாள் ஊதியமான 10.58 கோடி ரூபாய்; மின்சார வாரிய பொறியாளர் கழகம் சார்பில், 31 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆகியோர் உடனிருந்தனர்.திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், சீர்மன்னு திருச்சிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள், தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். ஆதீனத்தின் பொது மேலாளர் திருமாறன், பொறியாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X