பொது செய்தி

தமிழ்நாடு

கால் நூற்றாண்டாக பதவி உயர்வு இல்லை: பேரூராட்சி பணியாளர்கள் எதிர்பார்ப்பு

Added : ஆக 21, 2021
Share
Advertisement
திண்டுக்கல்- -'25 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாத தங்களுக்கு உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும்' என்று பேரூராட்சி பணியாளர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.தமிழக அரசு பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்ற முடிவு எடுத்துள்ளது. அதே சமயம் தகுதியான ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது பேரூராட்சி துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பதவி

திண்டுக்கல்- -'25 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாத தங்களுக்கு உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும்' என்று பேரூராட்சி பணியாளர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக அரசு பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்ற முடிவு எடுத்துள்ளது. அதே சமயம் தகுதியான ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது பேரூராட்சி துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இவர்கள் 25 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணியாற்றும் சூழ்நிலை தற்போது உள்ளது.ஆரம்ப காலத்தில் 621 பேரூராட்சிகள் இருந்த நிலையில் தற்போது 529 மட்டுமே உள்ளன. இனி தரம் உயர்த்தினால் 475 ஆக குறையும். இதில் பணியாற்றுவோர் 25 ஆண்டுகளாக பதவி உயர்வே இல்லாமல் இருக்கின்றனர்.

மேலும் அடிப்படை பணியாளர்களின் 20 சதவீத பதவி உயர்வு என்பதும் இதனால் தடைபடுகிறது.இது குறித்து அவர்கள் கூறுகையில், ''பேரூராட்சிகளை நகராட்சியாக்கும் அதேசமயம் தகுதியான ஊராட்சியை பேரூராட்சி யாகவும் தரம் உயர்த்த வேண்டும்.இரண்டு செயல்களும் ஒரே சமயத்தில் நடக்கும்போது பதவி உயர்வின்றி தவிக்கும் நாங்கள் மேலும் பாதிக்காதவாறு இருக்க ஆவன செய்ய வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X