அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கடல் உணவு ஏற்றுமதி பிரச்னைகளுக்கு தீர்வு'

Added : ஆக 21, 2021
Share
Advertisement
சென்னை:''கடல்சார் பொருட்களின் ஏற்றுமதிகளை பாதிக்கும் பிரச்னைகளை தீர்க்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் முருகன் உறுதி அளித்தார்.சென்னையில், கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. வியக்கத்தக்க வளர்ச்சிகூட்டத்தில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்

சென்னை:''கடல்சார் பொருட்களின் ஏற்றுமதிகளை பாதிக்கும் பிரச்னைகளை தீர்க்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என, மத்திய அமைச்சர் முருகன் உறுதி அளித்தார்.

சென்னையில், கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது.


வியக்கத்தக்க வளர்ச்சி

கூட்டத்தில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:கடல்சார் பொருட்களின் ஏற்றுமதிகளை பாதிக்கும் பிரச்னைகளை தீர்க்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கடந்த 2014 - 15 முதல், 2018 - 19 வரை, சராசரியாக, 10.2 சதவீதத்துடன், மீன்வளத்துறை வியக்கத்தக்க வளர்ச்சியை எட்டியது.

கடந்த, 2019 - 20ம் ஆண்டில், இந்தியாவில் மீன் உற்பத்தி வரலாறு காணாத அளவில், 141.56 லட்சம் டன்களாக இருந்தது. சர்வதேச அளவில், இந்திய மீன் உற்பத்தி 8 சதவீதமாக உள்ளது. மீன் வளர்ப்பில், இந்தியா இரண்டாம் இடம் பிடித்தது.மற்ற பல துறைகளைப் போல, கடல் உணவுத் துறையையும் கொரோனா பாதித்துள்ளது. தற்போது, நம் கடல் பொருட்கள் ஏற்றுமதி, மீண்டு வருகிறது. இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும்.

மீனவர்கள் மற்றும் மீன்வளத் தொழில்களின் நலனுக்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீனவர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து, பிரதமர் அக்கறை கொண்டுள்ளார். இந்திய கடல் மீன்வள மசோதா, 2021ஐ, மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து பிரச்னைகளையும் நாங்கள் கருத்தில் கொள்வோம். தேவையான தீர்வுகளை அரசு அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


ஆலோசனை

கூட்டத்தில், இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள், தங்களுக்கு உள்ள தொழில் பிரச்னைகளை தெரிவித்தனர். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் உறுதி அளித்தார்.கூட்டம் முடிந்த பின், மீன்வளத்துறை செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் முருகன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X