சாதிக்கும் தேனி பெண் விவசாயி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதிக்கும் தேனி பெண் விவசாயி

Added : ஆக 22, 2021
Share
தேனிதேனி அருகே பெண் விவசாயி சலிமா, நாவல் பழத்தை பதப்படுத்தி உலர் நாவலாக மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனையில் அசத்திவருகிறார்நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி விவசாயம் செய்தாலும் அதன்பலன் கூலிக்கு கூட தேறவில்லை என விவசாயிகள் அலுத்து கொள்வார்கள். விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது வியாபாரிகள், இடைத்தரகர்கள் என்பதால் இந்த நிலை. இதற்கு தீர்வு காண விளை
 சாதிக்கும் தேனி பெண் விவசாயி

தேனிதேனி அருகே பெண் விவசாயி சலிமா, நாவல் பழத்தை பதப்படுத்தி உலர் நாவலாக மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனையில் அசத்திவருகிறார்

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி விவசாயம் செய்தாலும் அதன்பலன் கூலிக்கு கூட தேறவில்லை என விவசாயிகள் அலுத்து கொள்வார்கள். விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்வது வியாபாரிகள், இடைத்தரகர்கள் என்பதால் இந்த நிலை. இதற்கு தீர்வு காண விளை பொருட்களை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி விவசாயிகள், வியாபாரிகளாக மாற வேண்டும் என அரசும் ,பிற துறைகளும் வலியுறுத்துகின்றன.

தேனி அருகே பள்ளபட்டியை சேர்ந்த பெண் விவசாயி சலிமா 48. இவர் மலர் , தென்னை சாகுபடி செய்கிறார். கோவிந்தநகரம் இயற்கை விவசாய பண்ணையில் 45 தேன் பெட்டிகளை வளர்த்து 15 நாட்களுக்கு ஒருமுறை 30 கிலோ தேன் சேகரிக்கிறார். கிலோ ரூ.650க்கு நேரடி விற்பனை செய்து வருவாய் ஈட்டுகிறார். மதிப்பு கூட்டிய நாவல்இதே இயற்கை பண்ணையில் சீசனில் விளையும் நாவல் பழத்தை அரைகிலோ எடையில் பேக்கிங் செய்து சந்தைப்படுத்துகிறார். இயற்கையில் விளையும் நாவல் பழத்தின் சுவையால் வந்தவுடன் விற்றுதீர்கிறது. மரங்களில் அதிக நாவல் வரத்து ஏற்படும் போது இதனை கட்டாயமாக விற்க வேண்டும் என்ற அவசியத்திற்கு உட்படாமல் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.300 கிலோ நாவல் பழத்தை நிழலில் உலர்த்தினால் மூன்றில் ஒருபங்கு கிடைக்கிறது. அதன் நீர் சத்து குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக டிரையரில் சில நாட்கள் உலர வைக்கிறார். திரட்சியான நாவல்பழம் கொட்டையுடன் சுருங்கி உலர் திராட்சை போல் மாறுகிறது. நாவல் பழம் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்பதால் பலர் விரும்பி சாப்பிடுவர். சீசன் நாட்களில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் தற்போது ஆண்டு முழுவதும் கிடைக்க செய்துள்ளார்.

உலர் நாவல் பழத்தில் உள்ள துவர்ப்பு நல்ல மருத்துவகுணம் உடையது என்கிறார் சலிமா. சர்க்கரை நோயாளி அல்லாதவர்களுக்கு உலர் நாவலை தேனில் ஊற வைத்து பாட்டிலில் அடைத்து விற்கிறார். இது அதிக சத்தும், சுவையுடையதாகும். இவரது தோட்டத்தில் விளைந்த நாட்டு ரோஜா இதழ்களை உலர வைத்து தேனில் கலந்து குல்கந்து தயார் செய்கிறார். தேனில் ஊறிய நெல்லிக்காய் போன்றவற்றை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.

அளவுக்கு ஏற்றபடி விலை உள்ளது.இயற்கையில் விளைந்த பழங்கள்விவசாயி சலிமா கூறியதாவது: நல்ல பொருட்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் கலப்படம் இன்றி இயற்கையான முறையில் விளைந்த நாவல், நெல்லி, குல்கந்து, தேங்காய் எண்ணெய் தயாரித்துள்ளோம். தரம் அறிந்து வாங்குவோர் திருப்தி அடைகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் விளை பொருட்களை மதிப்பு கூட்டினால் நல்ல லாபம் கிடைக்கும் ,என்றார். இவரின் முயற்சியை பாராட்ட 81486 21443.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X