பொது செய்தி

தமிழ்நாடு

மெத்தனம்; -கூடலூரில் பைபாஸ் ரோடு அமைக்கும் பணி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கூடலூர்-கூடலூரில் பைபாஸ் ரோடு அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனம் காட்டிவருகின்றனர். அடுத்த இரு மாதம் கழித்து கார்த்திகையில் துவங்கும் சபரிமலை சீசனுக்கு முன் பயன்பாட்டிற்கு வருமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை 160 கி.மீ., தூரத்திற்கு இரு வழி சாலை அமைக்கப்படுகிறது. இதில் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி,

கூடலூர்-கூடலூரில் பைபாஸ் ரோடு அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மெத்தனம் காட்டிவருகின்றனர்.

அடுத்த இரு மாதம் கழித்து கார்த்திகையில் துவங்கும் சபரிமலை சீசனுக்கு முன் பயன்பாட்டிற்கு வருமா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை 160 கி.மீ., தூரத்திற்கு இரு வழி சாலை அமைக்கப்படுகிறது. இதில் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சீலையம்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் பைபாஸ் ரோடு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

கூடலூர் தவிர மற்ற அனைத்து ஊர்களிலும் இப்பணி முடிந்து முக்கிய சாலையுடன் இணைக்கும் பணியும் முடிவடைந்து விட்டது. ஆனால் கூடலூரில் மட்டும் மெத்தனமாக நடந்து வருகிறது. வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே பைபாஸ் ரோடு துவங்கும் இடத்தில் பணிகள் நடைபெறவில்லை. அதேபோல் மந்தைவாய்க்கால் பாலம் அருகே முக்கிய சாலையின் இணைப்புப் பகுதிகளிலும் பணி கிடப்பில் உள்ளது.நெரிசல்சபரிமலை சீசன் நேரங்களில் கூடுதலான வாகனங்கள் இவ்வழியாக வரும்.

அந்த நேரத்தில் ஊருக்குள் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி கொள்வதுடன் விபத்துகளும் நடக்கும். சபரிமலை சீசன் துவங்க இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் பைபாஸ் ரோடு பணிகள் அனைத்தும் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.காரணம் என்னதேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'அனைத்து பகுதிகளிலும் இப்பணி முடிவடைந்துள்ளது. கூடலூரில் இத்திட்டத்திற்கு தேவையான மண் அள்ளுவதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. விரைவில் பைபாஸ் ரோடு பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்', என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X