பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா போலி சான்று :'கியூ-ஆர்' கோடு ஸ்கேன் செய்த பின் அனுமதி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
கூடலுார்:நீலகிரி மாவட்ட எல்லையில், கேரளா பயணியர் எடுத்து வரும், கொரோனா சான்றிதழின் 'கியூ-ஆர்' கோடு ஸ்கேன் செய்த பின்பே, அனுமதி வழங்கப்படுகிறது. கர்நாடகா பகுதியில் இருந்து நீலகிரிக்கு வரும், கர்நாடக பயணியருக்கு போலியான, கொரோனா 'நெகடிவ்' சான்றிதழ் தயாரித்து வழங்கிய நபரை, கடந்த வாரம் கர்நாடக போலீசார் கைது செய்தனர். இதனால், வெளி மாநில பயணியர் எடுத்து வரும் சான்றிதழை,

கூடலுார்:நீலகிரி மாவட்ட எல்லையில், கேரளா பயணியர் எடுத்து வரும், கொரோனா சான்றிதழின் 'கியூ-ஆர்' கோடு ஸ்கேன் செய்த பின்பே, அனுமதி வழங்கப்படுகிறது.

கர்நாடகா பகுதியில் இருந்து நீலகிரிக்கு வரும், கர்நாடக பயணியருக்கு போலியான, கொரோனா 'நெகடிவ்' சான்றிதழ் தயாரித்து வழங்கிய நபரை, கடந்த வாரம் கர்நாடக போலீசார் கைது செய்தனர். இதனால், வெளி மாநில பயணியர் எடுத்து வரும் சான்றிதழை, போலீசார் மருத்துவத் துறை ஊழியர்கள், மாநில எல்லையில் முழுமையாக ஆய்வு செய்து, அனுமதித்து வருகின்றனர்.

தமிழக - கேரளா எல்லையான நாடுகாணியில் பணிபுரியும் மருத்துவத் துறை ஊழியர்கள், கர்நாடகா, கேரளா பயணியர் எடுத்து வரும் 'நெகட்டிவ்' சான்றிதழின் 'கியூ-ஆர்' கோடு, ஸ்கேன் செய்து உண்மை தன்மையை உறுதி செய்த பின்பே அனுமதித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X