ஆக்கிரமிப்பால் அல்லல்: தத்தளிக்கும் நேதாஜி நகர்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
காரியாபட்டி--வாகனங்கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும்தான் தெருக்கள் என தெரிந்தும் காரியாபட்டி நேதாஜிநகரில் ஆட்டோ கூட செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.இதோடு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. அச்சம்பட்டி ரோட்டில் இருந்த சாக்கடை துார்ந்துள்ளதால் குப்பை நிறைந்து கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி உள்ளது.

காரியாபட்டி--வாகனங்கள் செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்கும்தான் தெருக்கள் என தெரிந்தும் காரியாபட்டி நேதாஜிநகரில் ஆட்டோ கூட செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.இதோடு வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்குகிறது. அச்சம்பட்டி ரோட்டில் இருந்த சாக்கடை துார்ந்துள்ளதால் குப்பை நிறைந்து கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. ஒரு சில இடத்தில் மட்டுமே தரைத்தள தொட்டி அமைக்கப்பட்டுள்ளதால் புழக்கத்திற்கான தண்ணீருக்காக மக்கள் சிரமப்படுகின்றனர். இப்பகுதி வளர்ந்து வரும் பகுதியாக இருப்பதால் முறையான கட்டமைப்பு வசதி இல்லாமல் இப்பகுதியின் வளர்ச்சி தடைபடுகிறது. பிளான் அப்ரூவல் கொடுக்கும்போது முறையாக கண்காணித்து கொடுத்திருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருக்கும் நேதாஜி நகரில் குடியிருக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X