பொது செய்தி

தமிழ்நாடு

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சென்னை : 'சென்னையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாலிகள் கர்ப்பிணியர், பாலுாட்டும் மகளிர் மற்றும் காசநோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில்
 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி

சென்னை : 'சென்னையில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சி பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாலிகள் கர்ப்பிணியர், பாலுாட்டும் மகளிர் மற்றும் காசநோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

இதுவரை, 25 லட்சத்து, 14 ஆயிரத்து, 228 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 10 லட்சத்து, 54 ஆயிரத்து, 704 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி என, 35 லட்சத்து, 68 ஆயிரத்து, 932 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.குடிசை பகுதி மக்களுக்கு, 315 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 24 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று, தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.மாநகராட்சி பகுதிகளில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்த, 044 - 2538 4520; 4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.அவர்களுக்கு, வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X