சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரம்பலூர் அருகே 900 ஆண்டு பழமையான கல் செக்கு கண்டு பிடிப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:-பெரம்பலுார் அருகே வெங்கலம் கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான கல் செக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பெரம்பலுார் மாவட்டம் வெங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில், வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன், சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆர்வலர் வசந்தன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். செல்லியம்மன் கோவிலின் முன்புறம் தரையில், ஒரு கல் செக்கு
 பெரம்பலூர் அருகே 900 ஆண்டு  பழமையான கல் செக்கு கண்டு பிடிப்பு

பெரம்பலுார்:-பெரம்பலுார் அருகே வெங்கலம் கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான கல் செக்கு கண்டறியப்பட்டு உள்ளது.

பெரம்பலுார் மாவட்டம் வெங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில், வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன், சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ் கருப்பையா, வரலாற்று ஆர்வலர் வசந்தன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். செல்லியம்மன் கோவிலின் முன்புறம் தரையில், ஒரு கல் செக்கு பதிக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.

தரையில் இருந்து 33 செ.மீ., உயரத்திலும், வெளிவிட்டம் 71 செ.மீ., உள்விட்டம் 64 செ.மீ., அளவுடையதாக கல் செக்கு உள்ளது. செக்கின் நடுவில் 30 செ.மீ., ஆழத்திலும் 20 செ.மீ., விட்டத்திலும் குழி அமைந்துள்ளது. பக்கவாட்டு பகுதியில் இரண்டு வரிகளில், 'ஸ்ரீ மல்ல(டி) நாட்டான் னிடுவித்த(ச்) செக்குப் பந்தல் லம்பலம்' என்று எழுதப்பட்டுள்ளது.

எழுத்தின் வடிவத்தைக் கொண்டு 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம், என்று கருதப்படுகிறது. 900 ஆண்டுகள் பழமையான கல் செக்கு கண்டுபிடித்தது பற்றி, வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன் கூறியதாவது: வெங்கலம் சிவன் கோவிலில் உள்ள கி.பி., 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டின் வழியாக, இவ்வூரின் பெயர் வெண்குளம் என்பதும், இவ்வூர் சோழர் காலத்தில், வணிக நகராக விளங்கியதும் தெரிகிறது.

பழங்காலத்தில் மன்னர்கள், படைத்தலைவர்கள், செல்வந்தர்கள் கோவில் வழிபாட்டுக்கும், பொதுப் பயன்பாட்டுக்கும் கல் செக்குகளை தானமாக வழங்கினர். பெரம்பலுார் மாவட்டத்தில், செஞ்சேரி, சத்திரமனை, வேலுார் ஆகிய கிராமங்களில், கல்செக்குகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன.

மற்ற ஊர்களில் உள்ள கல்செக்குகளில், 18 மற்றும் 20ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் காணப் பட்டாலும், வெங்கலத்தில் உள்ள இந்த கல்வெட்டு 11ம் நுாற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமையானது. மல்லடி நாட்டான் என்பவரே, இந்த கல் செக்கை செய்து கொடுத்திருக்கிறார். இவர் யாரென அறிய முடியவில்லை. பந்தல் அம்பலம் என்பது பந்தலுடன் கூடிய பொது இடமாகும்.

இது, தற்போது செல்லியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியாகும்.வருங்கால தலைமுறையினருக்கு, கடந்த கால வரலாற்றைப் பறைசாற்றும், இந்த அரிய வரலாற்று சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X