சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., அலுவலகம் முற்றுகை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ராயபுரம் : மூலக்கொத்தளம், கொல்லாபுரி நகர், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. ரயில்வேக்கு சொந்தமான இந்த இடத்தை, உடனடியாக காலி செய்ய வேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம், இரு வாரங்களுக்கு முன், 'நோட்டீஸ்' வழங்கியது. இது குறித்து, 18ம் தேதி ரயில்வே அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். ஆனால் ரயில்வே நிர்வாகம், முடிவில்
 எம்.எல்.ஏ., அலுவலகம் முற்றுகை

ராயபுரம் : மூலக்கொத்தளம், கொல்லாபுரி நகர், பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

ரயில்வேக்கு சொந்தமான இந்த இடத்தை, உடனடியாக காலி செய்ய வேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம், இரு வாரங்களுக்கு முன், 'நோட்டீஸ்' வழங்கியது. இது குறித்து, 18ம் தேதி ரயில்வே அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். ஆனால் ரயில்வே நிர்வாகம், முடிவில் மாற்றமில்லை என தெரிவித்தது.இதையடுத்து வாழ்வாதாரம் கோரி, ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தியை தொடர்பு கொண்டனர்.

அப்போது 'நேற்று காலை 10:00 மணிக்கு, எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வர சொன்னார். ஆனால் ஐந்து மணி நேரமாகியும் வரவில்லை; எந்த பதிலும் இல்லை.அரசு தலையிட்டு எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க, மாற்று இடம் வழங்க வேண்டும்' என, எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, 30க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X