சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வார்டு உறுப்பினர் வீட்டில் 20 சவரன், ரூ.1 லட்சம் திருட்டு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
பொன்னேரி : பொன்னேரியில், ஊராட்சி வார்டு உறுப்பினரின் வீட்டில், 20 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.பொன்னேரி அடுத்த ஆத்திரேயமங்களத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி, 35; ஆலாடு ஊராட்சி வார்டு உறுப்பினர். இவர், உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, 19ம் தேதி குடும்பத்தினருடன் பாடியநல்லுார் சென்றிருந்தார்.நேற்று காலை, இவரது வீட்டின்

பொன்னேரி : பொன்னேரியில், ஊராட்சி வார்டு உறுப்பினரின் வீட்டில், 20 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பொன்னேரி அடுத்த ஆத்திரேயமங்களத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி, 35; ஆலாடு ஊராட்சி வார்டு உறுப்பினர். இவர், உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, 19ம் தேதி குடும்பத்தினருடன் பாடியநல்லுார் சென்றிருந்தார்.

நேற்று காலை, இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, உடனடியாக வீடு திரும்பினார்.வீட்டினுள் சென்று பார்த்த போது, 20 சவரன் நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இது குறித்து, பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X