பொது செய்தி

தமிழ்நாடு

பூஜைகளுக்கு இடையூறு: பிச்சை குருக்கள் வேதனை

Updated : ஆக 22, 2021 | Added : ஆக 22, 2021
Share
Advertisement
பிள்ளையார்பட்டி:''சிவாச்சாரியார்களின் பூஜைகளுக்கு இடையூறு ஏற்படுவது வேதனை அளிக்கிறது,'' என, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கூறினார். தமிழகம் முழுவதும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற பெயரில் ஆகம விதிமுறை மீறல், பூஜைகள் பாதிக்கப்படுதல், பாரம்பரிய மூத்த அர்ச்சகருக்கு ஓய்வளிப்பது, பணி குறைப்பு என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சிவகங்கை மாவட்டம்

பிள்ளையார்பட்டி:''சிவாச்சாரியார்களின் பூஜைகளுக்கு இடையூறு ஏற்படுவது வேதனை அளிக்கிறது,'' என, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கூறினார்.

தமிழகம் முழுவதும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற பெயரில் ஆகம விதிமுறை மீறல், பூஜைகள் பாதிக்கப்படுதல், பாரம்பரிய மூத்த அர்ச்சகருக்கு ஓய்வளிப்பது, பணி குறைப்பு என பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில், சிவநெறி கழகம் சார்பில், கற்பக விநாயகர் வேத பாடசாலையில், 'ஆதி சைவ சிவாச்சாரியார்களுக்கு ஏற்பட்டிருக்கும் இடையூறு நீங்க விநாயகரை வேண்டி' சிறப்பு பாராயணம் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது.

கற்பக விநாயகர் கோவில் தலைமை சிவாச்சாரியார் பிச்சை குருக்கள், பாராயண நிகழ்வை துவக்கி வைத்து பேசியதாவது: இன்றைய சூழலில், ஆதி சைவ சிவாச்சாரியார்களுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களை நீக்குவதற்காக, விநாயகப் பெருமானை வேண்டு கிறோம். 1,008 ஆவர்த்தி கணபதி ஹோம பாராயணம் நடைபெறுகிறது. இதில், அறிஞர்கள், பாடசாலை மாணவர்கள் பங்கேற்றுஉள்ளனர்.

இந்த விஷயம், தற்போது நீதிமன்றத்தில் உள்ளதால் அதிகமாக பேச விரும்பவில்லை. எங்களுடைய வேண்டுகோளை விநாயக பெருமானிடம் சமர்ப்பித்து பிரார்த்திக்கிறோம். ஆயிரம் ஆவர்த்தி பாராயணம் செய்தால் நினைத்த காரியம் அனுகூலமாகும். யார் மீதும் நமக்கு வெறுப்பு இல்லை. யாரையும் புண்பட பேசவில்லை. பரம்பரை பரம்பரையாய் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சிவாலயங்களில் நடத்தி வரும் பூஜைகளுக்கு இடையூறு நிகழ்வதை தமிழகம் முழுதும் அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

சிவாலயங்களில் ஆதி சைவ சிவாச்சாரியார்களும், காளியம்மன், கறுப்பர், அம்மன், அய்யனார் கோவில்களில் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பூஜை செய்கின்றனர். அனைவரும் இணைந்தே செயல்படுகிறோம். இதில், தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துவது தான் மன வேதனை தருகிறது. நாங்கள் யாருக்கும் விரோதமானவர்கள் இல்லை. பல்வேறு சமூகத்தினரும் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தமிழக அரசு தலையிடக்கூடாது

கோவில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என, தமிழக அரசு அர்ச்சகர்களை நியமித்து வருகிறது. இது பிரச்னையை ஏற்படுத்தும். எந்த மொழியில் பூஜை செய்வது, ஆகம விதி, அர்ச்சகர்களாக யார் இருக்க வேண்டும் என்பதை பக்தர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு தலையிடாமல் இருக்க வேண்டுகோள் விடுக்கிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.பொன்னையா, மாநில இணை அமைப்பாளர், ஹிந்து முன்னணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X