பொது செய்தி

இந்தியா

புதர் மண்டிய வீட்டில் வசித்த மன நோயாளி மீட்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
உடுப்பி : செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி கிடந்த வீட்டில் வசித்த மன நோயாளி ஒருவரை, சமூக ஆர்வலர் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தார்.உடுப்பி நகரின், பேகாடி பத்ரகிரி தேவாலயம் சாலையில் சாலையில், ஆல்பர்ட் டிசோசா, 58, வசிக்கிறார். பி.எஸ்.சி., பட்டதாரியான இவர், உயர் பதவியில் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், மனநோயாளியான இவர், குடும்பத்தினர், உறவினர்கள் இல்லாமல் தனியாகவே
 புதர் மண்டிய வீட்டில் வசித்த மன நோயாளி மீட்பு

உடுப்பி : செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டி கிடந்த வீட்டில் வசித்த மன நோயாளி ஒருவரை, சமூக ஆர்வலர் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தார்.

உடுப்பி நகரின், பேகாடி பத்ரகிரி தேவாலயம் சாலையில் சாலையில், ஆல்பர்ட் டிசோசா, 58, வசிக்கிறார். பி.எஸ்.சி., பட்டதாரியான இவர், உயர் பதவியில் இருந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், மனநோயாளியான இவர், குடும்பத்தினர், உறவினர்கள் இல்லாமல் தனியாகவே வசித்தார். வீட்டை சுற்றிலும், செடி, கொடிகள் வளர்ந்து, புதர் மண்டிக்கிடக்கிறது.

இடியும் நிலையில் உள்ளது. விளக்கு வசதியும் இல்லை. அக்கம், பக்கத்தினர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு, உயிர் வாழ்கிறார்.இவரது நிலையை அறிந்த சமூக ஆர்வலர் விசு ஷெட்டி, அங்கு வந்து ஆல்பர்ட் டிசோசாவை மீட்டு, உபசரித்து ஏ.வி.பாலிகா மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இவரது உறவினர்கள் இருந்தால், இம்மருத்துவமனையை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார்.விசு ஷெட்டி கூறுகையில், ''சமுதாயத்தில் இது போன்று, அவலமான நிலையில் வாழ்வது வருத்தமளிக்கிறது.''இத்தனை ஆண்டுகளாக, இவரை மீட்டு மாற்று வசதி செய்வதில், சம்பந்தப்பட்ட துறைகள் கவனம் செலுத்தாதது துரதிர்ஷ்டவசம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X