வண்டூர்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வண்டூரில் நடந்த ஓணம் விருந்து ஒன்றில் காங்., தலைவர் ராகுல் கலந்து கொண்டு உணவருந்தினார்.

கேரளாவின் மிக முக்கிய பண்டிகையாக ஓணம் கருதப்படுகிறது. மலையாள வருடத்தின் பிறப்பை குறிக்கும் இந்த பண்டிகை 10 நாட்கள் வரை மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும். ஓணத்தின் போது பெண்கள் அத்தப்பூக்கோலமிட்டு மகிழ்வார்கள்.

ஓணம் பண்டிகையின் முக்கிய அங்கமாக ஓணம் சத்யா என்ற விருது கருதப்படுகிறது. இதில் மலையாள பாரம்பரிய உணவு வகைகள் வாழை இலையில் பரிமாறப்படும். இது போன்ற ஒரு விருந்து கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தி பவன் ஸ்னேகாரமம் என்ற முதியோர் இல்லத்தில் நடந்தது. அந்த விருந்தில் காங்., தலைவர் ராகுல் அங்கு தங்கியிருக்கும் முதியவர்களுடன் அமர்ந்து கேரள பாரம்பரிய உணவு வகையான சாதம், சாம்பார், பப்படம், இஞ்சி புளி, பச்சடி ஆகியவற்றை ருசித்து சாப்பிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE