பொது செய்தி

இந்தியா

அமரேஷ்வராவுக்கு இணைப்பு சாலை பணிகள் முடக்கம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ராய்ச்சூர் : சிறிய காரணத்துக்காக, ஒப்பந்ததாரர் ஒருவர், பணிகளை நிறுத்தியதால், பிரசித்தி பெற்ற அமரேஷ்வராவுக்கு, இணைப்பு ஏற்படுத்தும் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ராய்ச்சூர் மாவட்டத்திலேயே பெரிய புண்ணிய தலம், அமரேஷ்வரா. புராண வரலாறு சிறப்பு மிக்க, இப்புண்ணிய தலத்தில், ஆண்டு தோறும் பெரிய அளவில், திருவிழா நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.இந்த

ராய்ச்சூர் : சிறிய காரணத்துக்காக, ஒப்பந்ததாரர் ஒருவர், பணிகளை நிறுத்தியதால், பிரசித்தி பெற்ற அமரேஷ்வராவுக்கு, இணைப்பு ஏற்படுத்தும் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ராய்ச்சூர் மாவட்டத்திலேயே பெரிய புண்ணிய தலம், அமரேஷ்வரா. புராண வரலாறு சிறப்பு மிக்க, இப்புண்ணிய தலத்தில், ஆண்டு தோறும் பெரிய அளவில், திருவிழா நடக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.இந்த தலத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும் தேசிய நெடுஞ்சாலை -- 150ஐ அபிவிருத்தி செய்ய, அரசு திட்டமிட்டது. பொதுப்பணித்துறை சார்பில், இரண்டு பேக்கேஜ்களில், திட்டத்தை செயல்படுத்த, எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

தேவரபூபுரா அரசு தொடக்க பள்ளியிலிருந்து, அமரேஷ்வராவின் பெரிய திருமண மண்டபம் வரை, 12 அடி அகலத்தில் இரண்டு வழி பாதை அமைக்கும் பணிகள், 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.இரண்டாம் கட்டத்துக்கு, டெண்டர் பெற்ற ஒப்பந்ததாரர், ஐந்தாறு மாதங்களுக்கு பின், பணிகளை துவங்கினார்.தேசிய நெடுஞ்சாலை -- 150 லிருந்து, தேவரபூபுரா கிராம பஞ்சாயத்து அலுவலகம் வரை, 4 கி.மீ., சாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இதற்காக சாலையின் ஒரு ஓரத்தில், மண் தோண்டப்பட்டது.12 அடி சாலை அகலப்படுத்துவதால், விவசாயிகள் தங்களின் நிலம், சாலையில் சேர்ந்துவிடும் என, பீதியடைந்துள்ளனர்.

தங்களுக்கு நிவாரணம் வழங்கிய பின், பணிகளை துவங்கும்படி பிடிவாதம் பிடிக்கின்றனர். இதையே காரணம் காண்பித்து, ஒப்பந்ததாரர் பணிகளை நிறுத்தியுள்ளார்.பல ஆண்டுகளுக்கு பின், அமரேஷ்வரா சாலை அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கிராமத்தினர், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி, சாலை பணிகளை துவங்க வேண்டிய, பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பொறுப்பின்மையால், சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டது.100 அடி சாலையில் மட்டுமே பிரச்னை ஏற்பட்டுள்ளது. மற்ற இடங்களில் சாலை பணிகளை, துவங்கியிருக்க வேண்டும். ஆனால் ஒப்பந்ததாரர்கள், பணிகளை துவக்கவேயில்லை.ஒப்பந்ததாரருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் பயனில்லை. தற்போது ஷ்ரவண மாதம் என்பதால், அமரேஷ்வராவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்கள் மண், துாசியில் பயணிக்க செல்ல வேண்டியுள்ளது.ஒப்பந்ததாரர் அப்ரார் ஹூசேன் கூறுகையில், ''சாலை பணிகளுக்கு, விவசாயிகள் நிவாரணம் கேட்கின்றனர். எனவே பணிகள் நிறுத்தப்பட்டது. ஷ்ரவண மாதம் முடிந்த பின், எம்.பி.,யுடன் கலந்தாலோசித்து, பிரச்னைக்கு தீர்வு கண்டு, பணிகளை துவங்குவேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X