பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வேட்டி, சேலை ஈரோட்டில் பணி மும்முரம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஈரோடு:ஈரோடு மாவட்ட விசைத்தறிகள் மூலம் 1.32 கோடி பேருக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான, 'ஆர்டர்' வழங்கப்பட்டு, உற்பத்தி பணி துவங்கி உள்ளது.பொங்கல் பண்டிகையின்போது ஏழைகள், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், அந்தியோதையா அன்னயோஜனா திட்ட பயனாளிகளுக்கு இலவசமாக வழங்க இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டு 209 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம்,
 இலவச வேட்டி, சேலை ஈரோட்டில் பணி மும்முரம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட விசைத்தறிகள் மூலம் 1.32 கோடி பேருக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான, 'ஆர்டர்' வழங்கப்பட்டு, உற்பத்தி பணி துவங்கி உள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது ஏழைகள், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், அந்தியோதையா அன்னயோஜனா திட்ட பயனாளிகளுக்கு இலவசமாக வழங்க இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டு 209 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம், ஒரு கோடியே 80 லட்சத்து 41 ஆயிரத்து 698 பேருக்கு இலவச சேலைகள், ஒரு கோடியே 80 லட்சத்து 9,279 பேருக்கு வேட்டிகள் உற்பத்தியாகின்றன.

மாவட்டத்துக்கு 1.32 கோடி பேருக்கான இலவச வேட்டி, சேலைகள் ஆர்டர் வழங்கப்பட்டு உள்ளன.இதுபற்றி, விசைத்தறியாளர்கள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், 48 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ஆர்டர் வழங்கப்பட்டது.

மேலும், 6,974 விசைத்தறி மூலம் 69 லட்சத்து 74 ஆயிரத்து 170 வேட்டிகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கினர். 10 சதவீத பாவு வழங்கப்பட்டு 1,000 தறிகளில் உற்பத்தி பணி துவங்கி உள்ளது.அதுபோல 8,320 விசைத்தறி மூலம் 62 லட்சத்து 39 ஆயிரத்து 673 இலவச சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கி உள்ளனர். ஈரோடு மாவட்டத்துக்கு, ஒரு கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 843 வேட்டி, சேலைகள் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. டிச., 31க்குள் நிறைவு செய்து வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X