நெசவாளர் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெசவாளர் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படுமா?

Added : ஆக 22, 2021
Share
ஈரோடு:நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தனியாக கூட்டுறவு வங்கி, விசைத்தறிக்கு தனி ரக ஒதுக்கீடு போன்றவை, மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நெசவாளர்கள் கூறியதாவது:நெசவாளர்களுக்கு என, தனி கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும். தனி அடையாள அட்டை வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு தடையின்றி நுால் கிடைக்க, அரசே கொள்முதல் நிலையங்கள்

ஈரோடு:நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தனியாக கூட்டுறவு வங்கி, விசைத்தறிக்கு தனி ரக ஒதுக்கீடு போன்றவை, மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

நெசவாளர்கள் கூறியதாவது:நெசவாளர்களுக்கு என, தனி கூட்டுறவு வங்கி அமைக்க வேண்டும். தனி அடையாள அட்டை வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு தடையின்றி நுால் கிடைக்க, அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து, சங்கங்களுக்கு வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம், இரண்டு மாதத்துக்கு, 200 யூனிட் என்பதை, 300 யூனிட்டாக உயர்த்த வேண்டும்.

விசைத்தறிக்கு இரண்டு மாதத்துக்கு, 750 யூனிட் என, இலவச மின்சாரம் வழங்குவதை, 1,000 யூனிட்டாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். இச்சலுகையை, விசைத்தறி பாய் நெசவு தொழிலுக்கும் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை, தி.மு.க., வின் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். எனவே, அதை பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது அறிவித்து, படிப்படியாக நிறைவேற்றினால், நலிந்து வரும் நெசவு தொழில் மேம்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X