பொது செய்தி

தமிழ்நாடு

வைகை அணையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 22, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி:உசிலம்பட்டி பகுதி பாசனத்துக்கு 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் வைகை அணையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.வைகை அணையில் இருந்து 32 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களின் பாசனத்திற்கு 58ம் கால்வாய் திட்டம் உள்ளது. அணை நீர் மட்டம் 67 அடியாக உயரும்போது இக்கால்வாய் வழியாக நீர் திறக்க முடியும். சில வாரங்களாக வைகை அணை நீர் மட்டம் 67 அடியை
வைகை அணையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி:உசிலம்பட்டி பகுதி பாசனத்துக்கு 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் வைகை அணையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வைகை அணையில் இருந்து 32 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களின் பாசனத்திற்கு 58ம் கால்வாய் திட்டம் உள்ளது. அணை நீர் மட்டம் 67 அடியாக உயரும்போது இக்கால்வாய் வழியாக நீர் திறக்க முடியும். சில வாரங்களாக வைகை அணை நீர் மட்டம் 67 அடியை கடந்த நிலையில் உள்ளது.நேற்று 67.01 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி).

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு தற்போது கால்வாய் வழியாக நீர் வெளியேறுகிறது.இந்நிலையில் 58ம் கால்வாய் வழியாக நீர் திறக்க வலியுறுத்தி தமிழ் தேசிய பா.பி., கட்சி நிறுவன தலைவர் சங்கிலி, மாநில தலைவர் முருகன், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் வைகை அணையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கால்வாயில் உடனடியாக நீர் திறக்கவும், நீர் திறப்புக்கு நிரந்தர அரசாணை வெளியிடவும் வலியுறுத்தினர். நீர் திறக்கப்பட்டால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 110 கிராம விவசாயிகள் பயன் பெறுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X