சுங்கச்சாவடி கட்டணம் செப்., 1 முதல் உயர்வு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சுங்கச்சாவடி கட்டணம் செப்., 1 முதல் உயர்வு

Added : ஆக 22, 2021
Share
பெங்களூரு : தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடி கட்டணம், செப்டம்பர், 1 முதல், உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்சம், 5 ரூபாய் முதல், 10 ரூபாய் வரையிலும்; மாதாந்திர பாஸ் கட்டணம், 75 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கார், டெம்போ, பஸ், லாரி என வெவ்வேறு வாகனங்களும் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.இதனால், காய்கறிகள், பழங்கள் கொண்டு செல்லும் விவசாயிகள்

பெங்களூரு : தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கச்சாவடி கட்டணம், செப்டம்பர், 1 முதல், உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம், 5 ரூபாய் முதல், 10 ரூபாய் வரையிலும்; மாதாந்திர பாஸ் கட்டணம், 75 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், கார், டெம்போ, பஸ், லாரி என வெவ்வேறு வாகனங்களும் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனால், காய்கறிகள், பழங்கள் கொண்டு செல்லும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.பெங்களூரை சுற்றியுள்ள, அத்திப்பள்ளி, நெலமங்களா, தேவனஹள்ளி, ஹொஸ்கோட் ஆகிய தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நகருக்குள் வந்து, செல்கின்றன.கட்டணம் உயர்த்தப்படுவதற்கான தகவல் பலகை சுங்கச்சாவடி முகப்புகளில் பொருத்தப்படவுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X