ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

Added : ஆக 22, 2021
Share
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.எஸ்.பி. ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., மணிமொழியன் மற்றும் இன்ஸ்பெக்டர்

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.எஸ்.பி. ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., மணிமொழியன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜா மேற்பார்வையில் குற்றப்பிரிவு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று அதிகாலை 3:00 மணியளவில் உளுந்துார்பேட்டை, சரஸ்வதி நகர் அருகே ரோந்து சென்றபோது, அந்த வழியாக வந்த மகேந்திரா பிக்கப் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது.விசாரணையில், மினி லாரியை ஓட்டி வந்தவர் பில்லுார் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, 39; எனவும், லாரி உரிமையாளர் உளுந்துார்பேட்டை, அன்னை தெரசா நகரைச் சேர்ந்த வெற்றிவேல், 42; எனவும் தெரியவந்தது.அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல மாதங்களாக குட்கா பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வரும் கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், 45;குட்கா பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் உளுந்துார்பேட்டை டோல்கேட் பகுதியில் பெட்டிக் கடை உரிமையாளர் வீரசோழபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன், 32; ஏ.குமாரமங்கலம் பகுதியில் மளிகை கடை உரிமையாளர் முத்துக்குமரன், 43; ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா வைத்திருந்தது தெரியவந்தது.இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும், மினி லாரி, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.மேலும் ஒரு வழக்குஉளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியில் பெட்டிக் கடையில் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 30; என்பவரை கைது செய்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X