கேரளாவில் கொரோனாவால் நேற்று 17,106 பேர் பாதிப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று 17,106 ஆக குறைந்தது. நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 96,481 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 17,106 பேருக்கு கொரோனா உறுதியானது. நோய் பாதிப்பு சதவீதம் 17.73ஆக அதிகரித்தது. 20,846 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப் பட்டனர். கடந்த சில நாட்களில் கொரோனாவால் 83 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 19,428 ஆக அதிகரித்தது. தற்போது 1,78,462பேர்

மூணாறு:கேரளாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு நேற்று 17,106 ஆக குறைந்தது. நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 96,481 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 17,106 பேருக்கு கொரோனா உறுதியானது.

நோய் பாதிப்பு சதவீதம் 17.73ஆக அதிகரித்தது. 20,846 பேர் குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப் பட்டனர். கடந்த சில நாட்களில் கொரோனாவால் 83 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 19,428 ஆக அதிகரித்தது. தற்போது 1,78,462பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், 4,92,339 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலும் உள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் 2558,

கோழிகோடு 2236,

திருச்சூர் 2027,

எர்ணாகுளம் 1957,

பாலக்காடு 1624,

கொல்லம் 1126,

கோட்டயம் 1040,

கண்ணூர் 919,

ஆலப்புழா 870,

திருவனந்தபுரம் 844,

வயநாடு 648,

பத்தனம்திட்டா 511,

இடுக்கி 460,

காசர்கோடு 283 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரு நாள் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்த நிலையில் கொரோனா பரிசோதனை குறைவால் நேற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X