சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் சரண்; இருதரப்பினர் குவிந்ததால் பரபரப்பு

Added : ஆக 22, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே காணாமல் போன காதலர்கள் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை நம்பிகுள தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சூர்யா, 22; டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சையத் மிராஸ் மகள்

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே காணாமல் போன காதலர்கள் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை நம்பிகுள தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சூர்யா, 22; டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சையத் மிராஸ் மகள் அபிரீம், 19; இருவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 18ம் தேதி முதல் அபிரீமை காணவில்லை.இதுகுறித்து சையத் மிராஸ், தனது மகளை சூர்யா கடத்திச் சென்றதாக புகார் அளித்தார்.அதன்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சூர்யா - அபரீம் இருவரும் நேற்று மாலை உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீஸ் விசாரணையில் இருவரும் பெங்களூருவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.இதனையறிந்த இரு தரப்பினரும் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 6:00 மணியளவில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டனர்.ஆனால், இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என கூறியதற்கு மற்றொரு தரப்பினர் ஒப்புக் கொண்டனர். இஸ்லாமிய முறைப்படி, இன்று திருமணம் செய்வது என முடிவானதால் இரு தரப்பினரும் இரவு 8:30 மணியளவில் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X