பொது செய்தி

தமிழ்நாடு

மகனுடன் கூட்டத்தில் பங்கேற்ற பிரச்னை:துணைவேந்தர் நியமிக்க கோரிக்கை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
சிதம்பரம், -அண்ணாமலை பல்கலையில் நடந்த கூட்டத்தில் மகனுடன் பங்கேற்ற பொறுப்பு உறுப்பினருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மருத்துவ விடுமுறையில் சென்றார்.கடலுார் மாவட்டம் ,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழத்தை 2013ல் அரசு எடுத்த பின் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அரசிடம் வந்த பின் 2வது துணைவேந்தரான முருகேசன், ஆசிரியர்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பதவி

சிதம்பரம், -அண்ணாமலை பல்கலையில் நடந்த கூட்டத்தில் மகனுடன் பங்கேற்ற பொறுப்பு உறுப்பினருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மருத்துவ விடுமுறையில் சென்றார்.

கடலுார் மாவட்டம் ,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழத்தை 2013ல் அரசு எடுத்த பின் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அரசிடம் வந்த பின் 2வது துணைவேந்தரான முருகேசன், ஆசிரியர்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பதவி உயர்வு அளித்தது, தகுதி இருந்தும் பதவி உயர்வு வழங்காதது போன்ற காரணங்களால் அதிருப்தியடைந்த 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பதவி உயர்வு வழங்காததால் அலுவலர்களும் குமுறலில் உள்ளனர்.கடந்த ஜூனில் முருகேசனின் பதவி காலம் முடிந்தால், தமிழக உயர் கல்வி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பொறுப்பு உறுப்பினர்களாக கடல் வாழ் உயிரியல் மைய இயக்குனர் சீனிவாசன், டாக்டர் பாலாஜி சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.அண்ணாமலை தொலைதுாரக் கல்வி இயக்ககம், நேரடி பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்துவது, ஊழியர்கள், அலுவலர்கள், பிரச்னைகளை தீர்ப்பது போன்றவற்றை சமாளிக்க பல்கலையில் பணியாற்றும் தகுதி வாய்ந்தவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.பல்கலையின் பொறுப்பு உறுப்பினரான உயிரியில் மைய சீனிவாசனுக்கு ஒர் ஆண்டு பணி நீட்டிப்பு கொடுத்தது, அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அவரது மகன் பங்கேற்றதை கண்டித்து பரங்கிப்பேட்டை கடல் உயிரியல் மைய அலுவலகம் முன்பு ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்செட்டான சீனிவாசன் 2 வார மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.எனவே உயர் கல்வி அமைச்சர் பொன்முடி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டத்தை நடத்துவது மட்டுமின்றி, விரைவில் துணைவேந்தர் நியமிக்க வேண்டும் என பேராசிரியர்கள், அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X