பொது செய்தி

இந்தியா

பஞ்சாலைகளை அரசே நடத்த மில் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

Added : ஆக 22, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பஞ்சாலைகளை முழுமையாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என புதுச்சேரி மில் தொழிலாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி மில் தொழிலாளர்கள் சங்க தலைவர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை;புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீண்டும் பங்சாலைகளை இயக்குவது என்ற முடிவை சி.ஐ.டி.யூ., வரவேற்கிறது. அதே நேரத்தில், ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவது என்பது

புதுச்சேரி-பஞ்சாலைகளை முழுமையாக அரசே ஏற்று நடத்த வேண்டும் என புதுச்சேரி மில் தொழிலாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி மில் தொழிலாளர்கள் சங்க தலைவர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை;புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு மீண்டும் பங்சாலைகளை இயக்குவது என்ற முடிவை சி.ஐ.டி.யூ., வரவேற்கிறது. அதே நேரத்தில், ஆலையை தனியார் பங்களிப்புடன் இயக்குவது என்பது ஏற்புடையதல்ல.மத்திய ஜவுளி மேம்பாட்டு நிதியை பெற்று பஞ்சாலைகளை புதுச்சேரி அரசே முழுமையாக ஏற்று நவீனப்படுத்தி நடத்த வேண்டும்.சங்கங்கள் சார்பில் டில்லிக்கு சென்று அனைத்து பஞ்சாலைகளையும் புனரமைத்து இயக்க வேண்டும் என ஜவுளித் துறை அமைச்சர் சுமித்ரா ராணியை சந்தித்து பேசினோம்.அவர், புதுச்சேரியில் ஜவுளி பூங்கா அமைக்கவும், மூன்று மில்களையும் ஆய்வு செய்து புனரமைத்து தருகிறோம் என கூறினார்.ஆனால் புதுச்சேரி அரசு இதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசின் ஆலோசனையை பெற்று ஆலையை புனரமைத்து முழுமையாக இயக்க வேண்டும். மத்திய அரசிடம் நிதியை பெற்று ஜவுளி பூங்கா அமைத்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X